31st of May 2014
சென்னை:சசி இயக்கிய பூ படத்தில் தமிழுக்கு வந்தவர் பார்வதிமேனன். கேரளத்து
நடிகையான இவர் அந்த படத்தில் அற்புதமாக பர்பாமென்ஸ் பண்ணியிருநந்த போதும்
அதையடுதது கோடம்பாக்கத்தில் அவருக்கு யாரும் ஆதரவு கொடுக்கவில்லை.
அதனால், மலையாள படங்களில் நடித்து வந்த பார்வதி, டிராபிக் படத்தின் தமிழ்
ரீ-மேக்கான சென்னையில் ஒருநாள் படத்தில் ஒரு கேரக்டரில் நடித்தவர், பின்னர்
தனுசுடன் மரியான் படத்தில் நடித்திருந்தார்.
அந்த
படத்துக்காக மீனவ ஏரியா பெண்ணாக மீண்டும் அற்புதமாக நடித்திருந்தார்
இருப்பினும், அதன்பிறகும் கதாநாயகி வாய்ப்புகள் இல்லாத நிலை ஏற்பட்டது.
அந்த நேரம்தான் கமலின் உத்தமவில்லன் படத்தில் நடிக்க பார்வதிக்கு அழைப்பு
விடுத்தார் அப்படத்தை இயக்கும் நடிகர் ரமேஷ் அரவிந்த். இதனால் கமலுக்கே
ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து விட்டதோ என்று ஓடோடி வந்து கதை
கேட்டார் பார்வதி மேனன்.
ஆனால், கமலுக்கு
மருமகளாக, அதாவது ஜெயராமின் மகளாக நடிக்கும் வேடம்தான் கிடைத்தது.
இருப்பினும், கமலுடன் நடிக்க வேண்டும் என்ற கனவை இந்த படம் மூலம்
நனவாக்கிக்கொள்வோம் என்று ஒப்பந்தமான பார்வதி மேனன், இப்போது நடித்தும்
முடித்து விட்டார். கதைப்படி 21ம் நுற்றாண்டு பெண்ணாக நடித்துள்ள
பார்வதிமேனனுக்கு கமலுடன் இணைந்து நடிக்கவும் பல காட்சிகள் உள்ளதாம்.
அதனால், தமிழில் இதுவரை மூன்று படங்களில் நடித்தபோதும், நான்காவது
படத்தில் கமலுடன் நடித்து விட்டது எனக்கு சந்தோசமாக உள்ளது என்று தனது
மகிழ்சசியை பகிர்ந்து கொண்டு வருகிறார் பார்வதிமேனன்.
Comments
Post a Comment