ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் விக்ரம் – விஜய்மில்டன் மெகா கூட்டணி!!!

26th of May 2014
சென்னை::
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் ‘முருகதாஸ் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனமும், ‘ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ’ நிறுவனமும் இணைந்து ‘எங்கேயும் எப்போதும்’, ‘வத்திக்குச்சி’ ராஜாராணி’ ஆகிய படங்களை தயாரித்தனர்.. அதைத் தொடர்ந்து தற்போது அடுத்த அதிரடியாக விக்ரம் நடிக்கும் படத்தை தயாரிக்கிறார்கள்..
 
இந்தப்படத்தை இயக்குவது ‘கோலிசோடா’ என்ற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய விஜய் மில்டன் தான். விக்ரமுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இந்தப்படத்தின் முதல் காட்சி சற்று முன்புதான் படமாக்கப்பட்டது.
 
இந்த வருட ஆரம்பத்தில் மிக குறைவான முதலீட்டில் தயாராகி கிட்டத்தட்ட 8 கோடி ரூபாய் வசூலித்தது கோலிசோடா. அதற்கு காரணம் நாலு சிறுவர்களை வைத்து அதிரடியாக கதை சொன்ன விஜய்மில்டன் தான்.
 
அந்தவகையில் ‘கோலிசோடா’வை மனம் திறந்து பாராட்டிய விக்ரமை நட்பு ரீதியாக சந்திக்கப்போன விஜய்மில்டன் அவரிடமும் ஒரு கதையை சொல்லியிருக்கிறார் என ஏற்கனவே நாம் சொல்லியிருந்தோம். அது விக்ரமுக்கு பிடித்துப்போகவே, அப்போதே அவருக்கு கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டாராம் விக்ரம். இதோ இன்று படப்பிடிப்பு ஜரூராக தொடங்கி விட்டது...

Comments