பேய் படம்னாலே வீட்டை சுத்திதான் கதை நகரும் – சுந்தர் .சி!!!

21st of May 2014
சென்னை::உள்ளத்தை அள்ளித் தா’ முதல் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படம் வரை தனது கலகலப்பான நகைச்சுவைப் படங்களால் முன்னணி இயக்குனராக விளங்கி வருபவர் இயக்குனர் சுந்தர் .சி.
 
முதன் முறையாக ‘அரண்மனை’ என்ற ஒரு ஹாரர் படத்தை இயக்கி வருகிறார்.
 
விஷன் ஐ மீடியாஸ் நிறுவனம் சார்பாக தினேஷ் கார்த்திக் தயாரிப்பில் சுந்தர் .சி இயக்கத்தில் சந்தானம், வினய், ஹன்சிகா, ஆன்ட்ரியா, லட்சுமி ராய் இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் சுந்தர் .சி மற்றும் எண்ணற்ற நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள்.
 
படம் பற்றி இயக்குனர் சுந்தர் .சி கூறியதாவது,
 
நான் பண்ற முதல் ‘ஹாரர்’ படம். முழுக்க முழுக்க ‘ஹாரர்’ படமா இருந்தால் நம்ம ஊரு பெண்கள் எல்லாம் கொஞ்சம் பயப்படுவாங்க. அதனால, நிறைய காமெடி சேர்த்து ஒரு குடும்பப் படம் மாதிரியே உருவாக்கியிருக்கோம்.
 
ஒரு சின்ன கேப்புக்கு அப்புறம் நான் நடிச்சிருக்கேன். என் கூட வினய், சந்தானம், ஹன்சிகா, ஆன்ட்ரியா, லட்சுமிராய் மற்றும் பலர் நடிச்சிருக்காங்க.
பரம்பரை பரம்பரையா இருக்கிற அரண்மனைய விக்க ஒரு ஃபேமிலி வர்றாங்க. வர்ற இடத்துல அங்க நடக்கிற மர்மமான சம்பவங்கள்தான் படத்தோட கதை.
 
படத்துல அந்த அரண்மனைதான் ஹீரோ. அந்த அரண்மனைக்காக பல இடங்களுக்குப் போய்ப் பார்த்தேன். சரியா கிடைக்கலை. அப்புறம் ஹைதராபாத்ல நடிகர் மோகன் பாபு உருவாக்கியிருந்த ஒரு பங்களா பார்த்தோம், பிடிச்சிருந்தது. அப்புறம் 2 கோடி ரூபாய் செலவு பண்ணி அதை பிரம்மாண்டமா உருவாக்கினோம்.
 
ஹன்சிகா, இந்த படத்துல தெய்வீக சக்தி இருக்கிற ஒரு கிராமத்துப் பெண்ணா நடிச்சிருக்காங்க. இந்த படத்துக்கப்புறமா ஹன்சிகாவுக்கு நல்லா நடிக்கவும் தெரியும்னு பேசுவாங்க.
 
பொதுவா, ஒரு பேய் படம்னாலே அதுல ஒரு விஷயம் ஒற்றுமையா இருக்கும். உலக அளவுல அப்படித்தான் இருக்கும். சமீப காலமா பார்த்தீங்கன்னா அந்த மாதிரி படங்கள் நல்லா ஓடியிருக்கு. ‘சந்திரமுகி, காஞ்சனா’ இந்த மாதிரி படங்கள்ல கூட வீடுதான் மையமா இருக்கும்.
 
நான் பார்த்த படங்கள்ல எல்லா கேரக்டரும் ஒரு வீட்டுக்குதான் வரும். அப்படி குறுகலா இருந்தால்தான் பயமுறுத்தவும் முடியும். ஆனால், இந்த படத்துல வழக்கமான விஷயங்களை வச்சி பயமுறுத்தாம புதுசா பல விஷயங்களை சேர்த்திருக்கோம்,” என்றார்.
 
அரண்மனை’ ஜுன் மாதம் திரைக்கு வர உள்ளது.....

Comments