13th of May 2014
சென்னை::கோச்சடையான்' படம் விரைவில் வெளியாக உள்ளது. இதற்கிடையில் ரஜினிகாந்த்
நடிக்கும் புதிய படமாக 'லிங்கா' படத்தின் படபிடிப்பு மைசூரில் தொடங்கியது.
ரஜினிக்கு மைசூர் ராசியான இடம் என்பதாலும், ஏற்கனவே அங்கு படமாக்கப்பட்ட பல படங்கள் வெற்றிகரமாக ஓடி இருப்பதாலும், மைசூரை சுற்றியுள்ள பகுதிகளிலும் மைசூர் அரண்மனையிலும் பெரும் பகுதி காட்சிகளை படமாகக் திட்டமிட்டு இருந்தனர்.
ஆனால் மைசூர் அரண்மனையில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்கவில்லை. மைசூரிலும் படப்பிடிப்பு நடத்துவதற்கு எதிர்ப்பு கிளம்பியது.
காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு ஆதரவாக ரஜினி செயல்பட்டதாக கண்டித்து கன்னடர்கள் படப்பிடிப்பு நடந்த இடத்தில் போராட்டம் நடத்தினர். ரஜினி உருவ பொம்மையை எரிக்கவும் முற்பட்டனர். இதையடுத்து படப்பிடிப்புக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. போலீஸ் பாதுகாப்போடு ரஜினி, சோனாக்சி சின்ஹா நடித்த பாடல் காட்சி மற்றும் வசன காட்சிகளை படமாக்கி முடித்தனர்.
கன்னடர்கள் எதிர்ப்பினால் தொடர்ந்து அங்கு படப்பிடிப்பபை நடத்த இயலாத சூழ்நிலை நிலவி வருவதால், அடுத்தக்கட்ட படப்பிடிப்பை ஐதராபாத்துக்கு மாற்ற படக்குழுவினர் முடிவு செய்துள்ளார்களாம்..

கோச்சடையான் படத்தை வெளியிடும் ஞானவேல்ராஜா!!
ஈராஸ் இண்டர்நேஷனல் வழங்க, மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில், சௌந்தர்யா ரஜினிகாந்த் அஷ்வின் இயக்கியுள்ள படம் - கோச்சடையான். ரஜினிகாந்த், தீபிகா படுகோன் நடிக்கும் கோச்சடையான் திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, பஞ்சாபி, போஜ்பூரி, மாராட்டி என ஆறு இந்திய மொழிகளில் கடந்த வாரம் ஒன்பதாம் தேதி வெளியாகவிருந்தது. கடைசி நேரத்தில் ரிலீஸ் தேதி மே 23 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
கோச்சடையான் 3டி வடிவத்தில் தமிழ் தவிர தெலுங்கு, ஹிந்தி உட்பட ஆறு மொழிகளில் தயாராவதால் தொழில்நுட்பக் காரணங்களினால் தேதியை தள்ளி வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது என்று தயாரிப்பாளர் தரப்பு விளக்கம் அளிக்க... வங்கியில் 40 கோடி கடன்பாக்கி இருப்பதால் கோச்சடையான் படத்துக்கு கோர்ட் தடை விதித்துவிட்டதாக பரபரப்பான செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதனால் கோச்சடையான் படம் மே 23 ஆம் தேதி வெளிவருவதே சந்தேகம்தான் என்றும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், கோச்சடையான் படத்தை வெளியிடும் உரிமையை ஸ்டுடியோக்ரீன் படநிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா வாங்க இருப்பதாகவும், அதனால் திட்டமிட்டபடி மே 23 ஆம் தேதி கோச்சடையான் படம் வெளிவந்துவிடும் என்றும் ஒரு சாரர் சொல்கிறார்கள். கோச்சடையான் படத்துக்கு பிரச்சனையாக இருப்பது அப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம்தான். அந்நிறுவனத்தின் கணக்கை முடித்துவிட்டு,
விளம்பரங்களில் இருந்து அந்நிறுவனத்தின் பெயரை அகற்றிவிட்டால் கோச்சடையான் படத்தின் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும். அதன் பிறகு படத்தை நான் வெளியிடுகிறேன் என்று ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்திடம் கூறி இருக்கிறாராம் ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா. இதற்கு ஈராஸ் ஒப்புக்கொண்டால் கோச்சடையான் படத்தை ஸ்டுடியோக்ரீன் வெளியிடுமாம்.

Comments
Post a Comment