யோகா, தியானம் என்றெல்லாம் தினமும் இறங்கி விடுகிறாராம் சிம்பு: ஜாலி பையனாக இருந்த சிம்புவை இப்படி காலி பண்ணி விட்டார்களே இந்த நடிகைகள்!!

3rd of May 2014
சென்னை::வல்லவன் படத்தில் நடித்தபோது பொசுக்கென்று நயன்தாராவிடம் காதல் வயப்பட்டார் சிம்பு. ஆனால், அதை சாதகமாக்கிக்கொண்டு உதட்டு முத்தம் கொடுக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு நயன்தாராவின் உதட்டை கடித்து புண்ணாக்கினார். அதனால், பயந்து போன நயன்தாரா, இது சரிப்பட்டு வராது வாழ்க்கை முழுவதும் புண்ணான உடம்போடு வாழ முடியாது என்று நினைத்தாரோ என்னவோ, சில மாதங்களிலேயே சிம்புவுடனான காதலை ப்ரேக் அப் செய்து கொண்டார்.

அதேபோல்தான், வாலு படத்தில் நடித்தபோதும் சிம்பு-ஹன்சிகாவுக்கிடையே மலர்ந்த காதலும் சில மாதங்களிலேயே ப்ரேக்அப் ஆனது. ஆக, இப்போது தேவதாஸ் போன்று தனது வாழ்க்கையில் நடந்த கசப்பான காதல் அனுபவங்களை நண்பர்களிடம் சொல்லி புலம்பிக்கொண்டு திரிகிறார் சிம்பு. அதோடு, தனது மனதை ஆன்மீகத்திலும் திருப்பி விட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, யோகா, தியானம் என்றெல்லாம் தினமும் இறங்கி விடுகிறாராம். அதனால், ஜாலி பையனாக இருந்த சிம்புவை இப்படி காலி பண்ணி விட்டார்களே இந்த நடிகைகள் என்று அவரது நெருக்கமான நண்பர்கள் மேற்படி நடிகைகளை வசைபாடுகின்றனர். அதோடு சிம்புவை கல்யாணம் செய்து கொள்ளுமாறும் அட்வைஸ் செய்கிறார்கள்.
 
அதற்கு, இரண்டு முறை காதலில் விழுந்த மனசு கலங்கிப்போயிருக்கிறது. அதை தெளிவுபடுத்தத்தான் ஆன்மீகத்தில் இறங்கியிருக்கிறேன். எனது மனது சுத்தமானதும் ஒரு நல்ல பெண்ணை பார்த்து திருமணம செய்து கொள்வேன். ஆனால் அதற்கு கொஞ்சம் கால அவகாசம் வேண்டும் என்று சொல்லும் சிம்பு, காதல் என்னோட வாழ்க்கையில் தோல்வியாக இருந்தாலும், என்னை நிறைய யோசிக்க வைத்திருக்கிறது. அதனால்தான் இதுவரைக்கும விளையாட்டு பிள்ளையாக இருந்த நான் இப்போது கொஞ்சம் விவரமான பையனா மாறிக்கிட்டே வர்றேன் என்கிறாராம்...

Comments