நடிகைகளை பகைச்சிக்கிட்டா கால்சீட் தரமாட்டாங்க: ஜீவாவின் மழுப்பல் பதில்!!!

17th of May 2014
சென்னை::மாஜி நடிகை ராதாவின் மகளான கோ பட நாயகி கார்த்திகாவுடன் அவரது முதல் படத்தலேயே நடித்தவர் ஜீவா. அநத வகையில், கார்த்திகாவின் கேரியரில் முக்கியமானவராகி விட்டார் ஜீவா. அதேபோல், கார்த்திகாவின் தங்கை துளசியின் இரண்டாவது பட நாயகனாகி விட்டார். முதல் படத்தில் கெளதமுடன் நடித்திருந்த துளசி இப்போது ஜீவாவுடன் நடித்திருக்கும் யான் படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார்.
 
இந்த படத்தில் முந்தைய படத்தில் செய்த தவறுகளை சரி செய்து, கதைப்படி ராணுவ அதிகாரி மகளாக கனகச்சிதமாக நடித்திருக்கிறாராம் துளசி. அவரது உடல்கட்டு, நடைஉடை பாவணைக்கு அந்த கேரக்டர் கச்சிதமாக பொருந்தி விட்டதாக அப்பட டைரக்டர் ரவி.கே.சந்திரன் மட்டுமின்றி ஜீவாவும் புகழ்ந்து தள்ளுகிறார்கள்.
 
மேலும், துளசியின் நடிப்பு குறித்து ஜீவா கூறுகையில், துளசியுடன் நடிக்கும்போது எனக்கு பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லை. ஆனால், சில காட்சிகளில் அவரது நடிப்பு பிரமிக்கத்தக்கதாக இருந்தது. அதையடுத்து, அவருக்கு முன்பு நாம் சோடைபோய்விடக்கூடாது என்று உஷாராக நடிக்கத் தொடங்கினேன் என்று சொல்லும் ஜீவாவிடம், கார்த்திகா-துளசி இருவருடனும் நடித்திருக்கிறீர்கள். அவர்களில் யார் திறமையானவர்கள்? என்று கேட்டால், இரண்டு பேருமே பர்பாமென்ஸ் ரீதியாக சிறந்த நடிகைகள்தான். யாரையும் குறைத்து மதிப்பிட முடியாது என்று செம பில்டப் கொடுத்தார்.
 
அதையடுத்து, இருவரில் யாராவது ஒருவரை குறித்து சொல்லுங்கள்? என்று அவருக்கு கிடுக்கிப்புடி போட்டால், எதுக்கு வம்புல மாட்டி விடுறீங்க. நான் எதையாச்சு சொல்லி வைக்க, நாளைக்கு இன்னொரு படத்துக்கு அவங்ககிட்ட கால்சீட் கேட்டா தரமாட்டாங்க. அதனால் நடிகைகளை நான் பகைச்சிக்கிட விரும்பல என்று சிரித்துககொண்டே சொல்லி எஸ்கேப் ஆனார் ஜீவா.
 
யான் பிரஸ்மீட்டில் நடிகர் ஜீவாவை டென்ஷனாக்கிய கேள்வி!
 
ஆர்.எஸ்.இன்போடைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள படம் “யான்”. பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இயக்கத்தில் ஜீவா, துளசி ஜோடியாக நடித்துள்ளனர். நாசர், ஜெயப்பிரகாஷ், தம்பி ராமையா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசை கூகுள்+ ஹேங் அவுட் மூலமாக வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து 'யான்' படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.
 
அப்போது பேசிய யான் படத்தின் நாயகன் ஜீவா, “நான் நடித்த படங்களிலேயே யான் ஒரு வித்தியாசமான படம். இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை பார்ப்பவர்கள் நிச்சயம் மீண்டும் ஒரு தடவை வந்து படத்தைப் பார்ப்பார்கள். இறுதிகட்ட படப்பிடிப்பு மொராக்கோவில் நடந்தது. பல பிரபலமான ஹாலிவுட் படங்களின் ஷூட் நடந்த லெகேஷன்களில் யான் படத்தை எடுத்திருக்கிறோம். அங்கு எடுக்கப்பட்ட சண்டைக்காட்சி உள்பட அனைத்து காட்சிகளும் அட்டகாசமாக வந்துள்ளது” என்று புளகாங்கிதப்பட்ட ஜீவாவிடம், “உங்கள் படங்களில் நீங்கள் குடிப்பது, புகை பிடிப்பது போன்ற காட்சிகளை வைப்பது இளைஞர்கள் பலரை தவறாக வழி நடத்துகிறது. உங்களைப்போன்ற கலைஞர்களுக்கு சமூக பொறுப்பு தேவை இல்லையா?“ என்று ஒரு நிருபர் கேட்க, ஜீவாவின் முகத்தில் டென்ஷன்.

கதைக்கு என்ன தேவையோ அதைம்தான் நான் செய்கிறேன். சிவா மனசுல சக்தி படத்தில் அந்த மாதிரி கேரக்டர் அமைந்தது. அதன் பிறகு நானும் குடிக்காமல், புகை பிடிக்காமல் நிறைய படங்களில் நடித்து விட்டேன். அதை பற்றி யாரும் பேசுவதில்லை. ஆனாலும் சிவா மனசுல சக்தி தான் எல்லோர் மனதிலும் பதிந்திருக்கிறது. படத்தின் கதாபாத்திர தன்மையைத்தான் நான் பிரதிபலிக்கிறேன். எனக்கும் நிறையவே சமூக பொறுப்பு இருக்கிறது. ஆனால் வின்ஸ்டன் சர்ச்சில் பற்றி படம் எடுக்கும்போது சிகரெட் இல்லாமல் எடுக்க முடியுமா? என்றார்.
 
அப்போது மைக்கை வாங்கிய பாடலாசிரியர் தாமரை, குடி மற்றும் சிகரெட் பிடிக்கும் காட்சிகள் இல்லாமல் படங்களை எடுக்க நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பளர்கள் முன்வர வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு இப்படிப்பட்ட படங்களை எடுங்கள்” என்று கேட்டுக் கொண்டார். ..

Comments