27th of May 2014
சென்னை::ஓம் சாந்தி ஓம் படத்தை அடுத்து ஸ்ரீகாந்த் நடிப்பில் அடுத்தப் படமாக தொடங்கப்பட்ட படம் - நம்பியார். பிரபல இயக்குநர் ராஜமௌலியின் கதை இலாகாவில் பணிபுரிந்த கணேஷா இயக்குகிறார். படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த சயின்ஸ்ஃ பிக்ஷன் படம். அறிவியல் களம் சார்ந்த, முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகிறது நம்பியார். நடிகர் ஸ்ரீகாந்த் இதை தனது கனவுப்படம் என்றே குறிப்பிடுகிறார்.

அறிவியல் களம் சார்ந்த
காமெடிப் படம் என்கிறார்கள். அப்புறம் என்னத்துக்கு நம்பியார் என்ற
தலைப்பு? எம்ஜிஆர் அவர்களின் மிக ராசியான வில்லன் அவர். முதலில் நம்பியாரை
புக் பண்ணிவிட்டீர்களா என்று கேட்பாராம் மக்கள் திலகம். இந்த படத்தின்
கதைக்கும் நம்பியார் என்ற தலைப்புக்கும் மிகப்பெரிய தொடர்பு இருக்கும்.
படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். - என்கிறார் ஸ்ரீகாந்த்.
தலைப்பு
மிகப்பெரிய ஜாம்பவானின் பெயராச்சே...கடைசி நேரத்தில் எதாவது பிரச்சனை
ஏற்படாதா? எந்தவொரு பிரச்சனையும் உருவாக்கிவிடக்கூடாது என்பதால்தான்
நம்பியார் அவர்களின் மகன் மோகன் நம்பியார் அவர்களை அணுகினோம்., நீங்கள்
தாராளமாக வைத்துக்கொள்ளுங்கள் என அனுமதி கொடுத்ததோடு தனது வாழ்த்தையும்
தெரிவித்தார். - என்கிறார் ஸ்ரீகாந்த்.
நம்பியார்
படத்துக்கு இன்னொரு பலமாக இவர்கள் கருதுவது காமெடியன் சந்தானத்தை. கதையைக்
கேட்ட மாத்திரத்தில் அவ்வளவு பிஸியான நேரத்திலும் அதிகபட்ச தேதிகளை
ஒட்டுமொத்தமாக வழங்கியிருக்கிறாராம். படத்தின் இன்னொரு ஹீரோ சந்தானம்
என்கிற அளவுக்கு அவருக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்களாம். விஜய்
ஆண்டனி நடிப்பு மற்றும் பெரிய படங்களுக்கு இசை என பிஸியாக இருப்பதால்
முதலில் இசையமைக்க மறுத்துவிட்டவர், நம்பியார் படத்தின் கதையைக் கேட்டவுடன்
இசையமைக்க ஒப்புக்கொண்டாராம்.....
Comments
Post a Comment