7th of May 2014
சென்னை::போலி நம்பர் பிளேட் பொருத்திய காரில் சென்ற நடிகை இலியானா கைதானார்.
இது பற்றி போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:–
நடிகை இலியானா
தமிழில் ‘கேடி’ படம் மூலம் அறிமுகமானவர் இலியானா. இயக்குநர் சங்கர் இயக்கி, நடிகர் விஜய் நடித்த நண்பன் படத்தில் கதாநாயகியாக நடித்ததின் மூலம் மிகவும் பிரபலமானார். மேலும் இவர் தெலுங்கு மற்றும் இந்திப்படங்களில் நடித்து உள்ளார்.
இவர் இந்தியில் நடித்து வெளியான ‘பார்பி’ திரைப்படம் மெகா ஹிட் ஆனது. தற்போது இவர் நடிகர் வருன் தவானுடன் நடித்து வரும் ‘மெயின் தேரா ஹீரோ’ படத்தில் வரும் உதட்டோடு உதடு முத்தக்காட்சி இணையதளங்களில் வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
காரில் போலி நம்பர் பிளேட்
இந்தநிலையில் மும்பையில் இந்த படம் தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக படக்குழுவினருடன் இலியானா ஒரு காரில் சென்றார். அவர்கள் சென்ற காரை வழி மறித்த மும்பை போலீசார் காரில் பொருத்தப்பட்டு இருந்தது போலி நம்பர் பிளேட் என கூறி, நடிகை இலியானாவை கைது செய்தனர்.
இதனால் படப்பிடிப்பு குழுவினர் இடையே பரபரப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் ‘மெயின் தேரா ஹீரோ’ படத்தின் விளம்பரத்திற்காகவே அந்த போலி நம்பர் பிளேட் பொருத்தியதாக படக்குழுவினர் போலீசாருக்கு விளக்கம் கொடுத்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே நடிகை இலியானா விடுவிக்கப்பட்டார்....

Comments
Post a Comment