6th of May 2014
சென்னை::சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று சமூக வலைத்தளமான
ட்விட்டரில் இணைந்துள்ளார். இதனை ரஜினிகாந்த் நேற்று அவர் அதிகாரப்
பூர்வமாக அறிவித்துள்ளார்.
சமூக வலை தளங்களில் அதிக அளவு பயன்படுத்தும் பெயர்களில் ரஜினியின்
யெரும் ஒன்றாக விளங்குகிறது. பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில்
ரஜினியின் பெயர்களில் பல கணக்குகள் செயல்பட்டு வருகின்றன. இதற்கு
ரஜினிகாந்தும் எந்த கட்டுபாடும் விதிக்கவில்லை. ட்விட்டரில் ஏற்கனவே
சூப்பர் ஸ்டார், ரஜினி, ரஜினிகாந்த் என்ற பெயர்களில் ரசிகர்கள் திறந்து
வைத்துள்ளனர். ஆனால் ரஜினி இதுவரை எந்த சமுக வலைத்தளத்திலும் சேராமல்
இருந்தார்.
அமிதாப், கமல் உள்ளிட்ட பிரபலங்கள் அத்தனை பேரும் வலைத்தளங்களில்
இயங்கி வரும் நிலையில் நேற்று திடீரென ரஜினிகாந்த் இனைந்துள்ளதாக அதிகாரப்
பூர்வமாக அறிவித்தார். இது குறித்து அவர் அளித்த வீடியோ பேட்டியில் என்
ரசிகர்கள் ஏராளமானோர் நான் சமூக வலைத்தளத்தில் இருக்க வேண்டும் என்று
விரும்பினார்கள்.
அவர்களின் விருப்பத்திற்கேற்ப நேற்று முதல் ட்விட்டரில் இணைகிறேன்
என்று கூறினார். ரஜினி அறிவித்த சில நிமிடங்களிலியே ரஜினியை தொடர்பவர்களின்
எண்ணிக்கை பல ஆயிரங்களை தொட்டுவிட்டது...
Comments
Post a Comment