5th of May 2014
சென்னை::இது வழக்கமாக நகைச்சுவை நடிகர்கள் ஹீரோவாகும்போது கேட்கப்படும் கேள்விதான்.. இனிமேல் நீங்கள் காமெடியனாக நடிக்க மாட்டீர்களாமே.. ஹீரோவாகத்தான் நடிப்பீர்களாமே என்று.. இப்படி கேள்வி கேட்பது ஒரு க்ளிஷே மாதிரி ஆகிவிட்டது.

அதனால் தற்போது ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தில் ஹீரோவாக நடித்துவரும் சந்தானமும் இந்த கேள்விக்கு தப்பவில்லை. ஆனால் நேற்று நடந்த ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ பத்திரிகையாளர் சந்திப்பில் இதற்கு தெளிவான விளக்கம் அளித்துவிட்டார் சந்தானம்.
நான் இப்போதும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடித்துவருகிறேன். சினிமாவில் இருப்பதால் அனைத்து துறைகளிலும் இறங்கிப்பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் தான் இப்போது கதாநாயகனாகவும் தயாரிப்பாளராகவும் மாறியிருப்பதற்கு காரணம். நல்ல கதை அமைந்தால், முடிந்தால் வருடத்திற்கு ஒரு படத்தில் கதாநாயகனாக நடிப்பேன்.. அதுகூட இந்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ சொல்லும் ரிசல்ட்டை வைத்துதான்” என்கிறார் சந்தானம் தெளிவாக..
Comments
Post a Comment