ஆபாச படசர்ச்சை ஸ்ருதி மிகவும் அதிர்ச்சியில்: சினிமா துறையில் கெட்டவர்கள் உள்ளதாக விரக்தி!!!

28th of May 2014
சென்னை::சுருதிஹாசனின் அரை குறை ஆபாச படங்கள் சமீபத்தில் இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

ராம் சரண் தேஜாவுடன் இணைந்து ஏவடு என்ற தெலுங்கு படத்தில் ஸ்ருதி ஹாசன் நடித்திருந்தார். இந்த படத்தில் ராம் சரண் தேஜாவுடன் ஒரு பாடல் காட்சியொன்றில் சுருதி ஹாசன் நடித்த போது புகைப்படங்கள் எடுக்கப்பபட்டன. இவற்றை வெளியிடக் கூடாது தயாரிப்பாளரிடம் ஸ்ருதி ஹாசன் உறுதி வாங்கி இருந்தாக கூறப்படுகிறது. ஆனால் அதை மீறி இப்படங்கள் இணைய தளங்களில் படங்கள் வெளியாகியுள்ளது.

இதனை கண்ட ஸ்ருதி ஹாசனை மிகவும் அதிர்ச்சியில் உள்ளார். ஆபாச படங்களை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஐதராபாத் போலீசில் ஸ்ருதி ஹாசன் புகார் அளித்துள்ளார். வழக்குபதிவு செய்துள்ள போலீசார், இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். சினிமா படப்பிடிப்புகளை படம் எடுத்துவந்த பத்து புகைப்படகாரர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த பிரச்சினை குறித்து சுருதிஹாசனிடம் கேட்ட போது, போலீசில் புகார் அளித்துள்ளதாக தெரிவித்த அவர். மேற்கொண்டு எதுவும் சொல்ல விரும்பவில்லை என்றார். எல்லா இடத்திலும் இருப்பது போல் சினிமாவிலும் கெட்டவர்களும், நல்லவர்களும் உள்ளனர். நான் நல்லவர்கள் மீதும் நல்ல விஷயங்கள் மீதும் தான் என் கவனத்தை செலுத்துகிறேன் என்றார்.....

Comments