- Get link
- X
- Other Apps
23rd of May 2014
சென்னை::இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் குமார், ‘பென்சில்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அவதாரம் எடுத்துள்ளார்.
கௌதம் மேனனிடம் துணை இயக்குனராக பணிபுரிந்த மணி நாகராஜ் இயக்கும் இந்தப்
படத்தில் ஜீ.வி.க்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். கிட்டதட்ட
இந்தப்படம் முடிந்துவிட்ட நிலையில் ஜீ.வி.பிரகாஷ் அடுத்த படத்தில் நடிக்க
தயாராகி விட்டார். இந்தப் படத்திற்கு ‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ என்று
தலைப்பு வைத்திருக்கிறார்கள்.
பென்சில்’ படத்தில் பள்ளி மாணவனாக நடிக்கும் ஜீ.வி.பிரகாஷ், ‘த்ரிஷா
இல்லைனா நயன்தாரா’ படத்தில் கல்லூரி மாணவராக புரொமோஷன் ஆகியிருக்கிறார்.
அதுவும் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகனாக நடிக்கிறார் ஜீ.வி.பிரகாஷ். இதற்காக
எம்.ஜி.ஆர் படம் போட்ட டீசர்ட்டுகளாக அணிந்து கலக்க விருக்கிறாராம்.
இப்படத்தில் ஜீ.வி.க்கு ஜோடியாக ‘கயல்’ படத்தின் ஆனந்தியும், புதுமுகம்
ஷ்ரிஷ்டியும் நடிக்கிறார்கள். ரிபெல் ஸ்டுடியோ தயாரிக்கும் இந்தப்படத்தை
ஆதிக் என்பவர் இயக்குகிறார். இசை ஜீ.வி.பிரகாஷே தான். அடுத்த வாரம் முதல்
படப்பிடிப்பு துவங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது...
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment