ஆர்யாவுக்கு ஜோடியானார் பிரபல கன்னட நடிகை: தீபா சன்னிதி!!!

19th of May 2014
சென்னை::அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான விஷ்ணுவர்தன் அடுத்து இயக்கும் படம் ‘யட்சன்’.

இந்தப் படத்தில் ஆர்யாவும் விஷ்ணுவர்தனின் தம்பி கிருஷ்ணாவும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். இது இருவரும் இணையும் முதல் படம். மேலும் இப்படத்தில் கிஷோர், ஜான் விஜய், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், ரோபோ சங்கர் ஆகியோரும் நடிக்கவிருக்கிறார்கள். இதில் ஆர்யாவுக்கு ஜோடியாக கன்னடத்தில் பிரபல நடிகையாக திகழும் தீபா சன்னிதி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

தீபா சன்னிதி, ஏற்கெனவே, கன்னட ‘லுசியா’ திரைப்படத்தின் தமிழ் ரீ-மேக்கில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார். ‘யட்சன்’ தமிழில் அவர் நடிக்கும் இரண்டாவது படம். கிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகையின் தேர்வு நடந்து வருகிறது. யுவன் சங்கர் ராஜ இசை அமைக்க, ‘ஆரம்பம்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இயக்குனர் விஷ்ணுவர்தன் தன்னுடைய விஷ்ணுவர்தன் films factory என்னும் புதிய பட நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளராக யு டி வி நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தை வழங்குகிறார். யட்சன் திரைப்படம் காதலும், காமெடியும் கலந்து சுவாரஸ்யமான படமாக இருக்கும் என்று படக்குழுவினர் கூறுகின்றனர்....

Comments