ஹேப்பி பர்த்டே சதீஷ்!!!

23rd of May 2014
சென்னை::மெரினா’, ‘எதிர்நீச்சல்’ படங்களில் ஹீரோ சிவகார்த்திகேயனின் நண்பராக நடித்து தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தவர் சதீஷ்.

இரண்டு படங்களிலுமே தனது சரளமான நகைச்சுவையாலும் டைமிங் சென்சாலும் ரசிகர்களை சிரிக்கவைத்தார் சதீஷ்.

குறிப்பாக எதிர்நீச்சல் படம் அவருக்கு ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது என்றுகூட சொல்லலாம்.
சிவகார்த்திகேயனுடன் தொடர்ந்து கூட்டணி அமைத்துவரும் சதீஷ் ‘மான் கராத்தே’ படத்தில் படம் முழுவதும் ட்ராவல் பண்ணும் காமெடியனாக நடித்திருந்தார்.

சந்தானம், சூரி இவர்களது வரிசையில் அடுத்த இடத்தில் முன்னேறிவரும் சதீஷுக்கு ஜாக்பாட் அடித்தது போல ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கத்தி’ படத்தில் விஜய்யின் நண்பனாக நடித்துள்ளார்.
சதீஷின் இந்த வளர்ச்சி குறுகிய காலத்தில் அவருக்கு கிடைத்துள்ளது என்றாலும் அதற்கு மூலகாரணம் அவரது திறமைதான்.

இன்று பிறந்தநாள் காணும் சதீஷுக்கு நமது poonththalir-kollywood தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது...

Comments