சென்னை::கோச்சடையான்’ ரிலீஸாக தாமதம், மைசூரில் ‘லிங்கா’ படப்பிடிப்பு நடத்த எதிர்ப்பு என ஒருபக்கம் அம்புகள் பாய்ந்துகொண்டிருந்தாலும் அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு கே.எஸ்.ரவிகுமாரின் டைரக்ஷனில் ’லிங்கா’ படப்பிடிப்பு நடந்துகொண்டுதான் இருக்கிறது. தற்போது நடந்துவரும் படப்பிடிப்பில் தனது முதல்கட்ட பகுதியை நடித்து முடித்திருக்கிறார் கதாநாயகி சோனாக்ஷி சின்ஹா.
இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் “எனது முதல் தமிழ்ப்பட்த்தில் நான் நடிக்கும் முதல்கட்ட படப்படிப்பை முடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. ‘லிங்கா’ படப்பிடிப்பில் இருந்தபோது வீட்டில் இருந்த மாதிரியான உணர்வே இருந்தது” என குறிப்பிட்டுள்ளார் சோனாக்ஷி சின்ஹா.
இந்தப்படத்தில் அவருக்கு 1940களில் வாழும் பெண்ணின் கதாபாத்திரம் என்பதால் அதற்காகவே பிரத்யேகமான உடைகள் வடிவமைக்கப்பட்டு உள்ளனவாம். ரஜினி இரட்டை வேடங்களில் நடிக்கும் இந்தப்படத்தில் அனுஷ்கா இன்னொரு கதாநாயகியாக நடிக்க, முக்கியமான வேடத்தில் ஜெகபதிபாபு நடிக்கிறார்..
Comments
Post a Comment