ஜெயம் ரவியுடன் ஜோடி சேரும் அஞ்சலி!!!

31st of May 2014
சென்னை:ஜெயம் ரவி தற்போது பூலோகம், ரோமியோ ஜுலியட், இதுதவிர அண்ணன் ராஜா இயக்கத்தில் ஒரு படம் என மூன்று படங்களில் நடித்து வருகிறார்.
இந்தப் படங்களைத் தொடர்ந்து சுராஜ் இயக்கும் புதிய படத்திலும் நடிக்கவிருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத அந்தப் படத்தில் ஜெயம் ரவியுடன் காஜ
ல் அகர்வால் நடிப்பார் என கூறப்படுகிறது. அதோடு இன்னொரு நாயகியாக அஞ்சலி ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
அஞ்சலி கடைசியாக தமிழில் வத்திக்குச்சி படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு சித்தியுடன் தகராறு ஏற்பட்டதால் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. ஐதராபாத்துக்கு குடி பெயர்ந்தார். அங்கு ஓரிரு தெலுங்கு படங்களில் நடித்தார். தமிழ் பட வாய்ப்புகள் வந்தும் நடிக்கவில்லை.
பிறகு திடீரென மாயமானார். அரசியல்வாதி ஒருவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் குடியேறி விட்டதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் அஞ்சலி நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ்ப் படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments