என் காதல் ஒன்றுதான் காதலிகள்தான் மாறுகிறார்கள்’ சிம்பு தடாலடி!!!

2nd of May 2014
சென்னை::என் காதல் ஒன்றுதான்; காதலிகள்தான் மாறுகிறார்கள்? என்று தத்துவம் பேசுகிறார் சிம்பு.சிம்புவுக்கும், நயன்தாராவுக்கும் காதல் மலர்ந்து முறிந்த  பிறகு ஹன்சிகாவுடன் காதல் மலர்ந்தது. அதுவும் முறிந்துவிட்டது. ‘வாலு படத்தில் மலர்ந்த இந்த காதல், அப்படம் முடிவதற்குள் முடிந்துவிட்டது.

இதனால்  கடைசி கட்ட ஷூட்டிங் முடங்கியது. விவகாரம் தயாரிப்பாளர் சங்கத்தில் பஞ்சாயத்துக்கு போனது. பிறகு ஹன்சிகா நடிக்க ஒப்புக் கொண்டார். தற்போது  பெங்களூரில் சிம்பு, ஹன்சிகா டூயட் படமாகிறது. இந்த அனுபவம் பற்றி ஹன்சிகாவிடம் கேட்ட போது, இப்படத்தை முடிக்க வேண்டிய பொறுப்பு எனக்கு  இருக்கிறது. நான் .சிம்புவுக்காக நடிக்கவில்லை. டைரக்டருக்காக நடிக்கிறேன்.

எங்களுக்குள் என்ன நடந்ததோ அது முடிந்துவிட்டது. நான் காழ்ப்புணர்ச்சி  கொண்டவள் கிடையாது. பழையதை நினைத்து கொண்டிருக்காமல் எதிர்காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன் என்கிறார்.இரண்டு முறை காதல்  தோல்வி அடைந்து ஆன்மிகத்துக்கு மாறிவிட்ட சிம்புவிடம் கேட்டபோது, ‘மாஜி காதலியுடன் நடிப்பது புதிதல்ல. என்னுடையது என்றைக்கும் ஒரே வகை காதல்  தான். காதலிகள்தான் மாறி கொண்டிருக்கிறார்கள்.

யாராவது ஒருவரிடம் அன்பை நிலைக்க செய்ய முயல்கிறேன். அவர்கள் அதை புரிந்து கொள்ள வேண்டும்.  இப்போது ஆன்மிகத்துக்கு மாறி இருக்கிறேன். வலியை உணர்வது போல் அதிலிருந்து வெளிவந்து ஆறுதல் அடையவும் தெரிந்து கொண்டேன் என தத்துவம்  உதிர்க்கிறார்.
  

Comments