முன்னாள் நீலப்பட நடிகை நடித்த படத்துக்கு யு சான்று!!!!

22nd of May 2014
சென்னை::ஜெய்-சுவாதி ஜோடி, மீண்டும் இணைந்திருக்கும் படம் வடகறி.
க்ளவுட் நைன் சார்பில் தயாநிதி அழகிரி தயாரிக்கும் இந்தப்படத்தை சரவண ராஜன் இயக்கியுள்ளார். விவேக் சிவா, மெர்லின் சாலமோன் ஆகியோர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். ஆரம்பத்தில் இப்படத்தில் இசையமைப்பாளராக இருந்த யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் உருவான ஒரே ஒரு பாடலை மட்டும் படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
மேலும் படத்தில் மும்பை கவர்ச்சி நடிகை சன்னிலியோன் ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டுள்ளார். இது ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால படத்திற்கு சென்சாரில் எந்தவிதமான சர்டிஃபிகேட் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பும் இருந்தது.
 
இந்நிலையில் படத்தை பார்த்த சென்சார் குழுவினர் படத்திற்கு எந்த கட்டும் கொடுக்காமல் ‘U’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். வரும் ஜூன்-12ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. முன்னால் நீலப் பட நடிகை நடித்த ஒரு படம் இந்தியாவில் யு சான்று பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது..

Comments