6th of May 2014சென்னை::விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் நடிக்கும் படம் சகாப்தம். சில
மாதங்களுக்கு முன்பே பூஜை போடப்பட்டது. ஆனால், தேர்தல் வேலைகள் இருந்ததால்
படப்பிடிப்பை தள்ளி வைத்திருந்த விஜயகாந்த், இப்போது படப்பிடிப்பை
முடுக்கி விடடுள்ளார். கடந்த சில தினங்களாக படப்பிடிப்பு நடந்து
கொண்டிருக்கிறது. ஆனால், ஏற்கனவே கோலிவுட்டில் உள்ள சில கதாநாயகிகளிடம்
கால்சீட் கேட்டனர். ஆனால், புதுமுக நடிகர் சண்முகப்பாண்டியனுடன் நடிப்பதில்
எந்த ஆட்சேபனையும இல்லை. ஆனால், அரசியல் வட்டாரமாக உள்ளதே என்று அவர்களது
பாசறைக்குள் செல்ல தென்னிந்திய நடிகைகள் தயங்கி நின்றனர்.
அதனால்
என் மகன் படத்தில் நடிக்க தயக்கமா? அவன் கூடிய சீக்கிரமே முன்னணி
ஹீரோவாகி விடுவான். அப்போது சண்முகப்பாண்டியனுடன் ஒரு படத்தில் நடிக்க
சான்ஸ் கிடைக்காதா? என்று இதே நடிகைகள் ஏங்கும் காலமும் வரும் என்று
சொல்லிக்கொண்டு, மும்பையில் நடிகை வேட்டையை முடுக்கி விட்டார்
விஜயகாந்த்.
அந்த தேடுதல் வேட்டையில் இப்போது
புனேயைச் சேர்ந்த ஒரு சூப்பரான மாடல் அழகி கிடைத்து விட்டார். நேற்றைய
தினம்தான் அவர் சென்னை வந்து சகாப்தம் படத்தில் நடிப்பதற்கு அக்ரிமென்டில்
சைன் போட்டுள்ளார். நாளை முதல் சண்முகப்பாண்டியனுடன் இணைந்து அந்த புனே
நடிகை நடிக்கவிருக்கிறார். ஆனால், அந்த நடிகையின் பெயர் என்ன. அவரது
புகைப்படம் போன்றவற்றை தற்போதைக்கு சஸ்பென்சாக வைக்க உத்தரவிட்டுள்ளாராம்
கேப்டன். அதனால் இந்த தகவலை தந்த சகாப்தம் யூனிட்டினர், மற்ற விவரங்களை
சொல்ல மறுத்து விட்டனர்..
Comments
Post a Comment