மைசூர் அரண்மனைக்குள் ஷூட்டிங் நடத்த ரஜினி படத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு!!!

3rd of May 2014
சென்னை::மைசூர் அரண்மனைக்குள் ஷூட்டிங் நடத்த ரஜினி படத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ரஜினி நடிக்கும் ‘லிங்கா புதிய படத்தின் ஷூட்டிங் தொடக்க விழா நேற்று மைசூர் சாமுண்டீஸ்வரி கோயிலில் உள்ள பிள்ளையார் சன்னதியில் நடந்தது. பின்னர் மைசூர் அரண்மனை, ஸ்ரீரங்கபட்டணம், சாமுண்டி மலைப்பகுதி போன்ற பகுதிகளில் ஷூட்டிங் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் மைசூர் அரண்மனைக்குள் ஷூட்டிங் நடத்த அனுமதி கேட்டபோது மறுக்கப்பட்டது.
 
இதனால் பரபரப்பு ஏற்பட்டது.இது பற்றி மைசூர் அரண்மனை நிர்வாக அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘அரண்மனையில் ஷூட்டிங் நடத்த வேண்டும் என்று சிலர் அனுமதி கேட்டனர். ஆனால் பட குழுவின் அங்கீகாரம் பெற்றவர்கள்  யாரும் நேரில் வந்து அனுமதி கேட்கவில்லை. அரண்மனைக்குள் ஷூட்டிங் நடத்தவேண்டுமென்றால் மாநில அரசு மற்றும் வேறு சில துறைகளிலிருந்து அனுமதி பெற வேண்டும் என்றார். ‘அரண்மனைக்குள் உள்ள குடியிருப்பு பகுதிகளில் ஷூட்டிங் நடத்த வேண்டி இருந்தது. அதற்கு மன்னர் குடும்பத்தினரின் அனுமதி தேவை. அதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்று பட குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது..

Comments