11th of May 2014சென்னை::ரஜினி இரண்டு வேடங்களில நடித்து வரும் படம் லிங்கா.
இந்த படத்தில் இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹா- அனுஷ்கா இருவரும் ரஜினிக்கு
ஜோடியாக நடிக்கின்றனர். கிட்டத்தட்ட 150 கோடி ரூபாய் செலவில் மிகப்
பிரம்மாண்டமான முறையில் இந்த படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கிறார்.
இந்நிலையில் லிங்காவில் நடித்து வரும் சோனாக்ஷி சின்ஹாவை, ரஜினியின்
மருமகனான தனுஷ் நடிக்கும் படத்திலும் நடிக்க வைக்கும் முயற்சி நடந்து
வருகிறது. பொல்லாதவன், ஆடுகளம் திரைப்படங்களுக்குப் பிறகு வெற்றிமாறன்
இயக்கும் புதிய படத்தில் தனுஷ் நடிக்கிறார். இது இருவரும் இணையும்
மூன்றாவது படம்.
முந்தைய இரண்டு படங்களையும் விட அடுத்து பெரிய ஹிட் கொடுக்க வேண்டும்
என்று நினைக்கும் வெற்றிமாறன், படத்தில் நடிப்பவர்களும் பிரபலமானவர்களாக
இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம். அதனால், இந்தியில் பிரபலமான ஒரு
நடிகையை நடிக்க வைத்தால் இப்போதைக்கு தனுஷுக்கு பாலிவுட்டில் இருக்கிற
மார்க்கெட்டை வைத்து அங்கும் படத்தை ஓட வைத்து விடலாம் என்பதுதான் அவரின்
கணக்கு.
எனவே அவருடைய பார்வை தற்போது சோனாக்ஷி சின்ஹா மீது விழுந்திருக்கிறது.
இதுதொடர்பாக வெற்றிமாறன் சம்மந்தப்பட்ட நடிகையிடம் பேச்சிவார்த்தையிலும்
இறங்கிவிட்டாராம். தமிழில் ரஜினிகாந்துடன் அறிமுகமாவதால் இது எனக்கு
நல்லதொரு தொடக்கமாக இருக்கும் என்று ஏற்கனவே கூறிய சோனாக்ஷி, அவர்கள்
சொன்ன கதையைக்கேட்டு விரைவில் நல்ல பதில் சொல்வதாக கூறியிருக்கிறாராம்...
Comments
Post a Comment