28th of May 2014
சென்னை::சினிமாவைப் பொறுத்தவரை… அது தமிழ் சினிமாகவாகட்டும் அல்லது ஹாலிவுட்டாகட்டும் இங்கே படைப்பாளிகளாக இருக்கும் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு தான். அந்த நிலையை படிப்படியாக மாற்றவேண்டும், திறமையான பெண்களை ஊக்குவிக்கவேண்டும் என்பதற்காக பிரத்யேகமாக நடத்தப்படுகின்ற ஒரு விழா தான் சென்னை பெண்கள் சர்வதேச திரைப்பட விழா..!

கடந்த சில தினங்களாக சென்னையில் நடைபெற்று வந்த இந்தவிழாவின் நிறைவு நாள் கொண்டாட்டம் கடந்த ஞாயிறன்று எத்திராஜ் மகளிர் கல்லூரியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் 26 பிரிவுகளில் வெற்றிபெற்ற பெண்களுக்கு விருது வழங்கப்பட்டது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ஆதி கலந்துகொண்டு தங்களது பங்களிப்பை அளித்த பெண்களை பாராட்டிப் பேசினார். மேலும் விழா சிறப்பு நடுவர்களான இயக்குனர்கள் நந்தினி, பிரியா மற்றும் கார்ட்டூனிஸ்ட் மதன் ஆகியோரும் கலந்துகொண்டு பெண்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பேசினர்.
Comments
Post a Comment