கல்யாணத்துக்கு முன்பே அதிர்ச்சியடைந்த சின்மயி!!!

1st of May 2014
சென்னை::காதல் கணவர் ராகுலை கல்யாணம் செய்யப் போகும் சந்தோஷத்தில் இருக்கும் ட்விட்டர் புகழ் பாடகி சின்மயி தன் கணவருக்காக ஒரு ‘கருத்துள்ள’ பாடலை பாடி விட்டு வந்திருக்கிறார்.
‘மைனா’,  ‘சாட்டை’ ஆகிய படங்களைத் தயாரித்த ஷலோம் ஸ்டூடியோஸ் ஜான் மேக்ஸ் அடுத்ததாக ‘மொசக்குட்டி’ என்ற படத்தைத் தயாரித்து வருகிறார்.
 
இப்படத்தில் இடம் பெறும் ஒரு பாடலை பாடகி சின்மயி பாடினால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்து படத்தின் டைரக்டர் ஜீவன், இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் சின்மயியை அழைத்திருக்கிறார்கள். அவரும் ஸ்டூடியோவிற்கு வந்து பாடுவதற்காக, மைக் முன் நின்று ரெடியாகி விட்டார். அப்போது பாடுவதற்காக அவருக்கு கொடுக்கப்பட்ட பாடல் வரிகளை வாங்கிப் பார்த்ததும் அதிர்ச்சியாகி வெளியே வந்து விட்டாராம் சின்மயி.
 
அவர் அதிர்ச்சியடைய காரணமாக இருந்தது “வாடா.. டேய்… எம் புருசா நான் தாரேன் புதுப்பரிசா… ஓம் போல பேரழகா… பத்து பத்தா பெத்து தாரேண்டா…,” என்ற பாடல் வரிகள் தான்.
இருக்காதா பின்னே, விரைவில் திருமணம் நடைபெற இருக்கும் நேரத்தில் இப்படிப்பட்ட பாடல் வரிகளைப் பார்த்தால் அதிர்ச்சியடையாமல் என்ன செய்வார் சின்மயி.
 
உடனே சுதாரித்த இசை அமைப்பாளர் ரமேஷ் விநாயகம் முழுப் பாடலையும் பாடிக் காட்டியதும், உற்சாகமடைந்த சின்மயி இந்தப்பாடல் உண்மையிலேயே வரப்போகும் என் கணவருக்கு என்னோட புதுப் பரிசாகத்தான் இருக்கும். என் கேரியரிலும் இது முக்கியமான பாடலாக இருக்கும் என்று கூறி இந்தப் பாடலை எனக்கு கொடுத்ததற்கு மிகவும் நன்றி என மகிழ்ச்சியோடு மிகவும் உற்சாகமாக பாடிக்கொடுத்து விட்டு வந்தாராம்...
  

Comments