சன்னை::த்ரிஷா.. தமிழ்சினிமாவின் எவர்கிரீன் ஏஞ்சல். பத்து வருஷத்துக்கும் மேலாக ஒருத்தர் தனது தோற்றத்தில் எந்தவித மாற்றமும் இல்லாமல் இருக்க முடியுமா என்றால் அது த்ரிஷா ஒருவருக்கு மட்டுமே சாத்தியாமாகியிருக்கிறது என்று அடித்து.. ஸாரி.. அடிக்காமல் கூட சொல்லலாம்.
1999ல் ‘ஜோடி’ படத்தில் சிம்ரனுக்கு தோழியாக துணை நடிகையாக அறிமுகமான த்ரிஷா அடுத்தவருடமே சிம்ரனுக்கு டஃப் கொடுக்கும் நடிகையாக மாறுவார் என யார்தான் எதிர்பார்த்திருக்க கூடும்..? ஆனால், இதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. த்ரிஷா அதற்கு 100% தகுதியானவர் தான்.
ரஜினி, தனுஷ் இருவரைத் தவிர அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்த பெருமை த்ரிஷாவுக்கு மட்டுமே உண்டு. இன்று பிறந்தநாள் காணும் த்ரிஷாவுக்கு நமது poonththalir-kollywood தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது...
Comments
Post a Comment