அஜீத்-அனுஷ்காவுடன் கைகோர்க்கும் திரிஷா!!!

12th of May 2014
சென்னை::அஜீத் அனுஷ்காவுடன் கைகோர்க்கிறார் திரிஷா.அஜீத்துடன் ஏற்கனவே ஜி, கிரீடம், மங்காத்தா படங்களில் நடித்திருக்கிறார் திரிஷா. தற்போது மீண்டும் அவருடன் சேர்ந்து நடிக்க உள்ளார். அஜீத் நடிக்கும் புதிய படத்தை கவுதம் மேனன் இயக்கி வருகிறார். இதில் அனுஷ்கா ஜோடியாக நடிக்கிறார்.
 
இதேபடத்தில் மற்றொரு ஹீரோயின் கதாபாத்திரமும் இருப்பதால் அதில் நடிக்க திரிஷாவிடம் கேட்டிருந்தார் கவுதம். தேதி பிரச்னை காரணமாக அதுபற்றி உறுதி செய்யாமல் இருந்து வந்தார் திரிஷா. தற்போது மற்ற படங்களின் கால்ஷீட் தேதியை அட்ஜெஸ்ட் செய்து கவுதம் படத் துக்கு ஓகே சொல்லி இருக்கிறாராம். இன்னும் ஒரு சில நாட்களில் தனது கால்ஷீட் பற்றி உறுதி செய்வதாக இயக்குனரிடம் சொல்லி இருக்கிறார் திரிஷா என பட வட்டாரங்கள் தெரிவித்தன...

Comments