6th of May 2014
சென்னை::இந்தியாவில் இருந்து எத்தனையோ படங்கள் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு வந்தன. ஆனால் அவை சிறந்த படங்களாக இருந்தபோதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்பதால் ஆஸ்கர் விருது குழு அவற்றை நிராகரித்து வந்தது. அதன்காரணமாக, ஒரு ஹாலிவுட் பட நிறுவனம் தயாரித்த ஸ்லம்டாக் மில்லியனர் என்ற படத்துக்கு இசையமைத்து இரண்டு ஆஸ்கர் விருதுகளை தட்டி வந்தார் ஏ.ஆர்.ரஹ்மான்.

அதையடுத்து
ஹாலிவுட்டில் அவருக்கான வரவேற்பு அதிகரித்து விட்டது. அதனால் அதன்பிறகு 127
ஹைவேஸ் என்ற ஹாலிவுட் படத்திற்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான், தற்போது
மில்லியன் டாலர் ஆம் என்றொரு படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த ஆங்கில
மொழிப்படத்தின் இறுதியில் டைட்டீல் ஓடிக்கொண்டிருக்கும்போதே ஒரு
தமிழ்ப்பாடலை இணைத்துள்ளாராம்.
அந்த பாடலை உன்னி
கிருஷ்ணன்-சித்ரா ஆகியோர் பாடியுள்ளார்களாம். மே 15-ந்தேதி ஹாலிவுட்டில்
வெளியாக உள்ள இப்படம் முன்னதாக, வருகிற 9-ந்தேதியே இந்தியாவில் ரிலீசாக
உள்ளது. ஆஸ்கர் விருது பெற்றபோது, எல்லா புகழும் இறைவனுக்கே என்று தமிழில்
உச்சரித்த ஏ.ஆர்.ரஹ்மான். இப்போது ஒரு ஹாலிவுட் படத்தில் தமிழ்ப்பாடலையே
இணைத்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்...
ஸ்லம் டாக் மில்லியனர்’ மற்றும் ‘127 ஹவர்ஸ்’ என இரு ஹாலிவுட் படங்களுக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான் இப்போது மூன்றாவதாக ‘மில்லியன் டாலர் ஆர்ம்’ என்ற படத்திற்கு இசையமைத்துள்ளார். ஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான வால்ட் டிஸ்னி தயாரித்திருக்கும் இந்தப்படத்தை கிரெய்க் கில்லஸ்பி என்பவர் இயக்கியுள்ளார்.
இந்தப்படத்தில் சிறிதும் பெரிதுமாக மொத்தம் 14 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் ஏழு பாடல்களுக்கு மட்டும் புதிதாக இசையமைத்துள்ள ரஹ்மான், மீதி ஏழு பாடல்களுக்கு தான் ஏற்கனவே 90களில் இசையமைத்து ஹிட்டான பாடல்களின் இசையை பயன்படுத்தியுள்ளார்.

Comments
Post a Comment