10th of May 2014
சென்னை::தமிழ்சினிமா ரசிகர்களை நீண்ட நாட்களாக கிறக்கத்திலேயே வைத்திருக்கும் மெழுகுச்சிலை.. வேறு யார் நம்ம நமீதா தான்.. 2002ல் தெலுங்கில் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி, தமிழில் ‘எங்கள் அண்ணா’ மூலமாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து இன்று கன்னடத்திலும் மையம் கொண்டிருக்கிறது இந்த நமீதா புயல்.
ஹாய் மச்சான்ஸ்’ என ரசிகர்களை உரிமையுடன் அழைக்கும் நடிகை இந்திய சினிமாக்களிலேயே இவர் ஒருவராகத்தான் இருக்கும். தனது வெற்றிக்கும் புகழுக்கும் காரணம் ரசிகர்கள் தான் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர் என்பதால்தான் ரசிகர்களிடம் இந்த நெருக்கம்.
ரசிகர்களை, மச்சான் என்று செல்லமாக அழைக்கும் நமீதா இன்று(மே 10ம்
தேதி) தனது 32வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
குஜராத் மாநிலம், சூரத்தில்
பிறந்தவர் நடிகை நமீதா. 2001-ம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில், நான்காம்
இடம் பெற்ற நமீதா, விஜயகாந்த்தின் ''எங்கள் அண்ணா'' படத்தின் மூலம் தமிழ்
சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து தனது கவர்ச்சியான நடிப்பால் தமிழக
ரசிகர்களை கொள்ளை கொண்டார் நமீதா.
மேலும் 'மச்சான்ஸ்' என்ற ஒரே
வார்த்தையால் தமிழக ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் இவர். தற்போது
சினிமாவில் பெரிய வாய்ப்புகள் இல்லாவிட்டாலும், ரசிகர்கள் தன்னை மறந்து
விடக்கூடாது என்பதற்காக கடை திறப்பு விழா, சினிமா விழாக்கள், டி.வி.
நிகழ்ச்சியில் நடுவர் என்று தன்னை எப்போதும் அடையாளம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் நடிகை நமீதா இன்று தனது 32வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
தனது நண்பர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
இன்று பிறந்தநாள் காணும் நமீதாவுக்கு நமது poonththalir-kollywood இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
Comments
Post a Comment