16th of May 2014
சென்னை::ஜெய்யுடன் ‘வடகறி’ படத்தில் குத்தாட்டம் போட்ட ஆபாசப்பட நடிகை சன்னிலியோனி அடுத்ததும் புதிதாக ஒரு தமிழ்ப்படத்திலும் குத்தாட்டம் போட அட்வான்ஸ் வாங்கியிருக்கிறாராம்.
சன்னியைப் பற்றி புதிதாக சொல்லத் தேவையில்லை. கூகுளில் su என்று டைப் செய்தாலே மீதி லெட்டர்களை கூகுளே தேடிப்பிடித்து கொடுக்கும் அளவுக்கு ஆபாசப் பட உலகில் ஃபேமஸானவர்.
அப்படிப்பட்டவரை தமிழ் கூறும் நல்லுலகுக்கு கூட்டி வந்த பெருமைக்குரியவர் தயாரிப்பாளர் துரை தயாநிதி தான். அவர் தயாரிக்கும் ‘வடகறி’ படத்தில் சன்னியை சேலை கட்டி ஆட விட்டிருக்கிறார்கள்.
அதன் சூடே இன்னும் குறையாத நிலையில் தற்போது அதே ஆபாச சன்னியை தனது ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்திலும் குத்தாட்டத்துக்கு கமிட் செய்துவிட்டு வந்திருக்கிறார் டைரக்டர் கண்ணன்.
சேட்டை’ என்ற கன்றாவிப் படத்தை எடுத்த கண்ணனின் அடுத்த படம் தான் இது. விமலுடன் ப்ரியா ஆனந்த், சூரி மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார்.
கேட்ட சம்பளத்தை கொடுத்து விட்டதால் சன்னியை ரோட்டோரங்களில் ஆடவிட்டு தன் இஷ்டத்துக்கு பாடல் காட்சியை படமாக்க திட்டமிட்டிருக்கிறாராம் கண்ணன்.
சன்னியின் ஆட்டத்தைப் பார்த்து யாருக்காவது ஜன்னி வந்தால் அதுக்கு கண்ணன் பொறுப்பல்ல.
Comments
Post a Comment