இதனால் மகா ஜனங்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால்: குத்துச்சண்டை வீராங்கணையாகும் குஜராத் குதிரை நமீதா!!!
4th of May 2014
சென்னை::இதனால் மகா ஜனங்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால், சினிமாவில் நடிக்க
சான்சே இல்லாதபோதும், தமிழ்நாடே என் தாய் வீடு, தமிழ்நாட்டு
மச்சான்களெல்லாம் என் உறவுக்காரர்கள் என்று சொல்லிக்கொண்டு சென்னையிலேயே
முகாம் போட்டிருக்கும் குஜராத் குதிரை நமீதா, ஒரு குத்துச்சண்டை
பயிற்சியாளரை நியமித்து கடந்த ஓராண்டாக அவரிடம் அந்த கலையை தீவிர பயிற்சி
எடுத்துக்கொண்டிருக்கிறாராம்.
ஏன் என்னாச்சு.
சினிமாவில் குத்தாட்டம போட்டது போதாதுன்னு இப்படியெல்லாம் விபரீத
செயல்களில் நமீதா இறங்கியிருக்கிறார்? என்று கேட்டால், பள்ளிப்பருவத்தில்
இருந்தே நமீதாவுக்கு குத்துச்சணடை என்றால் ரொம்ப ஆர்வமாம். அதனால் டி.வி
சேனல்களில் வரும் குத்துச்சண்டை விளையாட்டுகளை கண்ணிமைக்காமல் கண்டு
ரசிப்பாராம். சில சமயங்களில் உணர்ச்சிவசப்பட்டு எதிரில் இருக்கும் டி.வி
பெட்டியையும் பதம் பார்த்து விடுவாராம்.
அப்படிப்பட்ட
நமீதா, சமீபகாலமாக சினிமா வாய்ப்புகளே இல்லாததால், தனக்குள் இருந்த
குத்துச்சண்டை வீராங்கணையை வெளியில் எடுத்து விட்டு முறையான பயிற்சி
எடுத்து வருபவர், குத்துச்சண்டை போட்டிகளில கலந்து கொண்டு மெடல்களை
வாங்கிக்குவிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம். அதனால் தனக்கான
முழுப்பயிற்சியும் முடிந்ததும் சென்னையில் ஒரு குத்துச்சண்டை போட்டியை
தனது சொந்த செலவிலேயே நடத்தவும் திட்டமிட்டுள்ளாராம் நமீதா.
ஆக,
இதுவரை நமீதாவின் குத்தாட்டத்தை மட்டுமே கண்டுகளித்த நம்ம ஊர்
ரசிகர்களுக்கு, விரைவில் நமீதாவின் குத்துச்சண்டையையும் பார்க்கும்
அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது.
Comments
Post a Comment