மரத்தில் ஏறி தேங்காய் பறித்த மம்தா!!!

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
4th of May 2014
சென்னை::சிவப்பதிகாரம்‘, ‘குரு என் ஆளு‘ தமிழ் படங்களிலும் மற்றும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்து வருபவர் மம்தா மோகன்தாஸ். இவர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டார். அதற்காக துவண்டுவிடாமல் அதற்கான சிகிச்சை எடுத்துக்கொண்டு ஒரு வருட ஓய்வுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்தார். தற்போது பாபு நாராயணன் இயக்கும் ‘நூர் வித் லவ் என்ற மலையாள படத்தில் நடிக்கிறார். நூர்ஜஹான் என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார்.

தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறிக்கும் காட்சி படமாக்கப்பட்டது. இதை டூப் நடிகையை வைத்து எடுத்துக்கொள்ளலாம் என்று இயக்குனர் கூறியபோது, ‘நானே நடிக்கிறேன்‘ என்று துணிச்சலாக நடிக்க முன்வந்தார். எவ்வளவோ தடுத்தும் கேட்காமல் தலையில் தலைப்பாகை கட்டிக்கொண்டு கையில் அரிவாளுடன் மரம் ஏறத் தயாரானார். அவரது தைரியத்தை பாராட்டிய இயக்குனர் காட்சி படமாக்க தயாரானார். சில நிமிடங்களில் மளமளவென மர உச்சிக்கு ஏறிச் சென்ற மம்தா தேங்காய்களை அரிவாளால் வெட்டி கீழே தள்ளினார். அவரது துணிச்சலை பட குழுவினர் கைதட்டி பாராட்டினர்..

Comments