25th of May 2014
சென்னை::பிரபல இந்தி நடிகை கரீஷ்மா கபூர். 1991ல் அறிமுகமாகி, பாம்பே டாக்கீஸ், ஓம்
சாந்தி ஓம், ஜான்வார், ஷக்தி, ராஜா ஹிந்துஸ்தானி உள்ளட நூற்றுக்கும்
மேற்பட்ட படங்களில் நடித்தார். தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து
வருகிறார். கரீஷ்மா கபூருக்கும் டெல்லியைச் சேர்ந்த தொழில் அதிபர் சஞ்சய்
கபூருக்கும் 2003ம் ஆண்டு திருமணம் நடந்தது. இருவர்களுக்கு சமீரா கபூர்,
ஜிகான் ராஜ்கபூர் என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.
4 ஆண்டுகளுக்கு முன்பு கணவன், மனைவி இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். கரீஷ்மா தனது குழந்தைகளுடன் மும்பை திரும்பி வந்து தாயுடன் வசித்து வந்தார். தற்போது கணவன், மனைவி இருவரும் மும்பை பாந்திரா நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு பரஸ்பரம் மனுதாக்கல் செய்துள்ளனர். குழந்தைகளையும் ஆளுக்கு ஒன்றாக பிரித்துக் கொள்ளவும் சம்மதம் தெரிவித்து மனுதாக்கல் செய்துள்ளனர். விவாரத்து குறித்து இருவருமே கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர். "பல வருடங்களுக்கு பின்பே பிரிந்து விட்டார்கள். இது ஒரு சட்டரீதியான நடவடிக்கை மட்டுமே" என்று அவர்களது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்....

Comments
Post a Comment