பிரகாஷ் ராஜையும் பிரச்சனையையும் பிரிக்க முடியாது போலவே தோன்றுகிறது: விமானத்தில் சக பயணி ஒருவருடன் அவர் சண்டை!!!
29th of May 2014
சென்னை::விமானத்தில் சண்டை என்றதும் ஏதோ படத்திற்காகாத்தான் சண்டை போட்டார் என்று நினைத்து விட வேண்டாம். இது நிஜமான சண்டை…பிரகாஷ் ராஜையும் பிரச்சனையையும் பிரிக்க முடியாது போலவே தோன்றுகிறது. சில வாரங்களுக்கு முன்னர்தான் தெலுங்கு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துடன் அவருக்கு மோதல் உருவானது. அதைத் தொடர்ந்து அவர் தெலுங்குப் படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டது. பின்னர், சில முன்னணி தயாரிப்பாளர்களின் தலையீட்டால் அந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.

கடந்த சில
நாட்களுக்கு முன் சென்னைக்கு வருவதற்காக பிரகாஷ்ராஜ் விமானம் ஒன்றில்
ஏறியிருக்கிறார். அப்போது சக பயணி ஒருவருடன் அவர் சண்டை போட்டதாக செய்திகள்
வெளியாகியுள்ளன. ஒருவரை ஒருவர் மிகவும் மோசமாக திட்டிக் கொண்டதாகவும்,
தெருச்சண்டையை விட அந்த சண்டை மிகவும் கேவலமாக இருந்ததாகவும் தெரிகிறது.
அதன்
பின்னர் விமான சிப்பந்திகள் தலையிட்டு, பிரகாஷ்ராஜையும் அந்த பயணியையும்
தனித்தனியே வெவ்வேறு இடங்களில் அமர வைத்துள்ளனர். அதன் பின்னர்தான் சண்டை
ஓய்ந்ததாம். எதற்காக அவர்களிருவரும் சண்டையிட்டுக் கொண்டார்கள் என்பது
இதுவரை தெரியவில்லை.
Comments
Post a Comment