இதுவரை கதாநாயகிகளை எட்டி நின்றே வேடிக்கைப்பார்த்த சூரி, ப்ரியாஆனந்த் உடன் நடனமாடியிருக்கிறாராம்!!!

3rd of May 2014
சென்னை::சந்தானம் ஹீரோவாகி விட்டதால் அவரைத் தொடர்ந்து காமெடியனாக வளர்ந்து கொண்டிருந்த சூரி தற்போது முக்கிய காமெடியனாகி விட்டார். வேலாயுதம் படத்தைத் தொடர்ந்து ஜில்லாவில் விஜய்யுடன் நடித்த நேரம் இப்போது பல படங்கள் அவர் கைவசம் உள்ளன. குறிப்பாக, விமல், சிவகார்த்திகேயனுடன் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா, சிவகார்த்திகேயனுடன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படங்களுக்குப்பிறகு சூரியை தங்களுடன் கூட்டணி சேர்ப்பதில் இரண்டாம் தட்டு, மூன்றாம் தட்டு ஹீரோக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
 
அதேசமயம், அவரது மார்க்கெட்டை கருத்தில் கொண்டு அவருக்கு கூடுதலான காட்சிகளையும் கொடுக்கிறார்கள். இதில் விமல், சூரி விசயத்தில் அநியாயத்துக்கு விட்டுக்கொடுக்கிறார். கடைசியாக அவருடன் தேசிங்கு ராஜா, புலிவால் படங்களில் நடித்தவர், இப்போது அவருடன் இணைந்து நடித்துக்கொண்டிருக்கும் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் விமலுக்கு இணையான வேடம் சூரிக்கும் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
 
விமலே நம்ம பங்காளி சூரிக்கும் முக்கியத்துவம் கொடுங்கள் என்று சொல்கிறாராம். அதன்காரணமாக, இதுவரை கதாநாயகிகளை எட்டி நின்றே வேடிக்கைப்பார்த்த சூரி, இந்த படத்தில் ஒரு பாடல் காட்சியில் விமலைப்போன்றே, ப்ரியாஆனந்த் உடன் நடனமாடியிருக்கிறாராம். மேலும், அந்த பாடல்களில் வழக்கத்தைவிட ப்ரியா ஆனந்த் கிளுகிளுப்பாக தோன்றியதால், ஆடி முடிப்பதற்குள் அதைப்பார்த்து உருகி கரைந்தே போய் விட்டாராம் சூரி...

Comments