நயனை கொஞ்சும் சிம்பு: சிம்புவை காதலிக்கவில்லை - நயன்தாரா!!!

13th of May 2014
சென்னை::நயன்தாராவை சிம்பு கொஞ்சும் காட்சி படமாக்கப்பட்டபோது ஷூட்டிங் ஸ்பாட்டில் சலசலப்பு ஏற்பட்டது.காதல் ஜோடிகளாக இருந்து பிரிந்த சிம்பு, நயன்தாரா இடையே மீண்டும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. பாண்டிராஜ் இயக்கும் ‘இது நம்ம ஆளு படத்தில் இருவரும் சேர்ந்து நடிக்கின்றனர். அவர்கள் நடித்த காட்சி ஏற்கனவே படமாக்கப்பட்டது. தற்போது நயன்தாராவை சிம்பு கொஞ்சும் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. இப்படத்தில் இருவருக்கும் ஏற்பட்ட சந்திப்பு நெருக்கத்தை அதிகப்படுத்தி இருக்கிறது.
 
இருவரும் சேர்ந்து டேட்டிங் செய்யும் அளவுக்கு நெருங்கி இருக்கின்றனர். சமீபத்தில் சென்னையில் நடந்த நடிகை திரிஷாவின் நள்ளிரவு பர்த்டே பார்ட்டியில் இருவரும் கலந்துகொண்டனர். அப்போது சிம்புவின் நெஞ்சில் சாய்ந்தபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்தார் நயன்தாரா. இந்நிலையில் இருவரும் கொஞ்சும் காட்சியை பாண்டிராஜ் படமாக்க முடிவு செய்தார். விரசம் எதுவும் இல்லாத கவிதைத்துவமான காட்சிதான். இருந்தாலும் அதிக டெக்னீஷியன்கள் வேண்டாம் என நயன்தாரா கேட்டுக்கொண்டதால், குறைவான டெக்னீஷியன்களை கொண்டே இந்த காட்சி படமாக்க முடிவு செய்யப்பட்டது.
 
காட்சிக்காக கேமரா தயாரானபோது இருவரும் எப்படி நடிக்கப்போகிறார்கள் என்பதை பார்க்க பாண்டிராஜ் உள்பட பட டெக்னீஷியன்கள் அனைவரும் ஆவலுடன் இருந்தனர். கேமரா ஓடத்தொடங்கியதும் நயன்தாரா&சிம்பு காட்சியில் ஒன்றிப்போய் நடிக்க ஆரம்பித்தார்கள். இதை வாய் பிளந்தபடி யூனிட்டார் பார்க்க லேசான சலசலப்பும் ஏற்பட்டது. ஒருவழியாக ஒரே டேக்கில் இந்த காட்சி ஓகே ஆனது.
 
சிம்புவை காதலிக்கவில்லை - நயன்தாரா!!! 

காதலித்து பிரிந்த சிம்பு - நயன்தாரா, தற்போது 'இது நம்மாளு' படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார்கள். இதற்கிடையில் இவர்கள் மீண்டும் நெருக்கமாக பழகுவதாகவும், இருவரும் மீண்டும் காதலிப்பதாகவும் கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்பட்டது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக, சமீபத்தில் நடிகை திரிஷா தனது பிறந்தநாளுக்காக ஏற்பாடு செய்திருந்த விருந்தில், சிம்புவும், நயன்தாராவும் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியானது. இதனால் சிம்பு - நயன்தாரா மீண்டும் காதலிப்பது உறுதி என்ற ரீதியில் தகவல்கள் வெளியானது.

ஆனால், இதை மறுத்துள்ள நயன்தாரா, "சிம்புவுடன் எனக்கு எந்த உறவும் இல்லை. திரிஷா பிறந்த நாள் விருந்தில் சிம்புவை சந்தித்தேன். நாங்கள் ஒன்றாக விருந்தில் கலந்து கொள்ளவில்லை." என்று தெரிவித்துள்ளார்...

Comments