9th of May 2014
சென்னை::வியாழக்கிழமை பிறந்த தமன்னா ஜாதகம் எங்கோ எப்படியோ லீக் ஆகிவிட்டது. அவ்வளவுதான் ஆளாளுக்கு ஜாதகம் பார்த்து தமன்னாவுக்கு அட்வைஸ் செய்யத் துவங்கி விட்டார்கள். இது ஒரு இந்திக்காரர் தமன்னாவின் ஜாதகத்தை கணித்து இணைய தளத்தில் உலவவிட்ட பலன்கள்.
டிசம்பர் 1989ல் மும்பையில் பிறந்த தமன்னாவுக்கு வரும் அக்டோபர் மாதம் வரைக்குமான ஜாதக பலன்களைக் கணித்திருக்கிறார் அந்த இந்தி ரசிகர். இவர் தன்னை ஒரு ஜோஸியர் என்று விளித்துக் கொள்கிறார். ஜோஸியம் சொல்லிவிட்டு தமன்னாவிடம் ஒரு அப்பாயிண்மெண்டையும் கேட்டிருக்கிறார்.
மே
புதியவர்களின் நட்பு கிடைக்கும். நட்பு பாராட்டினால் கல்யாணம் செய்து கொள்ள வற்புறுத்துவார்கள். அதனால் பார்த்து நடந்து கொள்வது நலம்! ஷூட்டிங் ஸ்பாட்களில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். யாரும் டிஸ்கஷன் என்று கூப்பிட்டால் நம்பிப் போய்விடக் கூடாது!
ஜூன்
புதியாக ஒரு நிறுவனத்தைத் துவங்க தமன்னாவுக்கு யோகம் உண்டு. கம்பெனி துவங்க லோன் கேட்டால் அது உடனே கிடைக்கும் (இதைச் சொல்ல தமன்னாவின் ஜாதகம் தேவையில்லை) வாங்கிய கடனை அடைக்கும் அளவுக்கு அந்த கம்பெனியின் வருமானம் இருக்காது. ஆனாலும் தமன்னாவிடம் கடன் கொடுத்தவர்கள் திருப்பிக் கேட்க மாட்டார்கள்! (இதுவும் தெரிந்த விஷயம்தானே)
ஜூலை
எப்போதும் தமன்னாவுக்குள் இருக்கும் இசை ஆர்வம் அவரை ஒரு இசை அமைப்பாளராக்க முயற்சிக்கும். உஷார், அப்படியெல்லாம் போகக் கூடாது & ரசிகர்கள் பாவம்!
ஆகஸ்ட்
ச்சீ…இந்தப் பழம் புளிக்கும் என்கிற ரீதியில் தெலுங்குப் பட உலகத்தை விட்டு வெளியேறுவார் தமன்னா. அங்கே இருக்கும் ஒரு ஹீரோவால் தமன்னாவுக்கு பெரும் துன்பம் நிகழும். ஆனால், அந்த ஹீரோவை ஒரு பொது இடத்தில் நிற்க வைத்து கேள்வி கேட்கும் அளவுக்கு தமன்னாவுக்கு தைரியம் வரும்.
செப்டம்பர்
சொல்லும்படியாக எதுவும் இல்லை. (அதான் ஆந்திரா ஹீரோவுடன் சண்டை இழுத்தால் வீட்டில்தான் முடங்க வேண்டும்)
அக்டோபர்
தமன்னாவுக்கு உடல் உபாதைகள் உருவாகும். மூச்சுத் திணறல், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் தோன்றும். ஆனாலும் தமன்னா தேறிவந்து பழையபடி மார்க்கெட் பிடிப்பார்.
Comments
Post a Comment