23rd of May 2014
சென்னை::கோவையில் நடிகர் விஷால், நடிகை ஸ்ருதிஹாசன் இணைந்து நடிக்கும்பூஜை படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. இப்படத்தை ஹரி இயக்கி வருகிறார். கோவை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனை நேற்று நேரில் சந்தித்து ஹரி புகார் மனு அளித்தார். அவர் கூறியுள்ளதாவது:

நான் தற்போது கோவையில் தங்கி பூஜை என்ற படத்தின் ஷூட்டிங் நடத்தி வருகிறேன். இதுவரை எனது பெயரில் பேஸ்புக் எதுவும் ஏற்படுத்தவில்லை. ஆனால் எனது அனுமதியின்றி எனக்கு தெரியாமல் இயக்குனர் ஹரி என்ற பெயரில் பேஸ்புக் அக்கவுன்ட் ஏற்படுத்தி அதை சிலர் தவறாக பயன்படுத்தி வருகின்றனர். அதில் என்னுடைய விவரங்களை தவறாக சித்தரித்துள்ளனர். எனவே எனது பெயரில் உருவாக்கப்பட்ட போலி பேஸ்புக் அக்கவுன்ட்டை இனிமேல் செயல்படாமல் தடை செய்தும், எனது பெயரில் பேஸ்புக் அக்கவுன்ட் உருவாக்கியவர்கள்
மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டு கொள்கிறேன். இவ்வாறு புகார் மனுவில் ஹரி கூறியுள்ளார்.மனுவை பெற்று கொண்ட கமிஷனர் விஸ்வநாதன், இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி மாநகர குற்றப்பிரிவு போலீசுக்கு உத்தரவிட்டார்...
Comments
Post a Comment