விஜய்க்காக பாடல் எழுதும் தனுஷ்!!!

20th of May 2014
சென்னை::
துப்பாக்கி படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் இணைந்திருக்கும் படம்தான் கத்தி.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க இளம் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்துல மொத்தம் 5 பாடல்கள் மற்றும் ஒரு தீம் மியூசிக் என்று ஏற்கெனவே சொல்லியிருதோம்.

இதுல 4 பாடல்களுக்கான இசையை முடித்துவிட்டார் அனிருத். பாக்கி ஒரு பாடல் மற்றும் தீம் மியூசிக் மட்டுமே இருக்கு. தற்போது இதுவல்ல செய்தி., பாக்கி இருக்கும் அந்த ஒரு பாடலை தனுஷ் எழுதப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு தனுஷ் எழுதும் பாடலை விஜய் படுவார் என்றும் கூறப்படுகிறது.

பொதுவாக தனஷ், விஜய்யின் மிகப்பெரிய ரசிகர். இதை அவரே பல மேடைகளில் சொல்லியிருக்கிறார். அதனால கத்தி படத்தில் தனுஷ் பாடல் எழுதினாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை....

Comments