ஒரே மேடையில் பில் கிளிண்டன், அர்னால்ட், கமல்ஹாசன்!!!

29th of May 2014
சென்னை::கடந்த மூன்று வருடங்களாக முழு மூச்சோடு உழைத்துக் கொண்டிருந்த ஐ படக்குழுவினருக்கு மட்டுமில்லாமல் தமிழ் ரசிகர்களுக்கும் ஒரு இனிமையான ஆச்சர்யம் கலந்த சந்தோஷ செய்தி காத்திருக்கிறது.

ஒரு பக்கம் ஏமி ஜாக்சனுக்கு சம்பள பாக்கி, அதனால் அவர் ஒரு பாடலுக்கு ஒத்துளைப்பு கொடுக்காமல் ஓடி விட்டார். இதன் காரணமாக ஷங்கர் கடும் கோபத்தில் உள்ளார். இன்னொரு பக்கம் எப்படியோ என் வேலை முடிந்த விட்டது என்ற நிம்மதியில் அடுத்த படமான முருகதாஸ் தயாரிப்பில், விஜய் மில்டன் இயக்கத்தில், சமந்தாவோடு ஜோடி சேர்ந்து நடிக்கப் போய் விட்டார் விக்ரம்.
 
இப்படி ஏகப்பட்ட கசப்பு செய்திகளை அந்த ஒரு விஷயமே வெள்ளக்கட்டியாக்கிவிட்டது. ஆம். ஐ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், அர்னால்ட் கலந்துகொள்கிறார்களாம். இவர்களுடன் நமது உலகநாயகனும் கலந்து கொள்கிறாராம்.
 
அப்போ ஐ பிரமாண்டம் இன்னும் முடியவில்லை….

Comments