வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்துக்கு முதல் இரண்டு நாட்கள் கல்லாப்பெட்டி நிறைந்தது. அடுத்தடுத்த நாட்களில் வசூல்?!!!
15th of May 2014
சென்னை::சந்தானம் ஹீரோவாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்துக்கு முதல்
இரண்டு நாட்கள் கல்லாப்பெட்டி நிறைந்தது. அடுத்தடுத்த நாட்களில் வசூல்
குறைய ஆரம்பிக்க, படத்தை தூக்கி நிறுத்த என்ன செய்யலாம் என்று தன்
குழுவினருடன் விவாதித்திருக்கிறார் சந்தானம்.
அவரது நண்பர்கள் குழுவினர்கள் சொன்ன ஆலோசனையின்படி, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படம் திரையிடப்பட்டிருக்கும் தியேட்டர்களுக்கு விஜயம் செய்ய இருக்கிறார்.
படத்தின் நாயகியான நடிகை ஆஷ்னா ஜாவேரி, இயக்குநர் ஸ்ரீநாத் ஆகியோர் அடங்கிய 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' திரைப்படத்தின் படக்குழுவினருடன், ரசிகர்களை நேரில் சந்திக்க, ஊர் ஊராக யாத்திரை கிளம்பிவிட்டார் சந்தானம்.
மே 14, புதன்கிழமையன்று, வேலூரில் 'அப்சரா' மற்றும் 'லட்சுமி' தியேட்டருக்கு வருகை தந்தார் சந்தானம். அங்கிருந்து, திருவண்ணாமலை 'சக்தி' மற்றும் 'பாலசுப்ரமணியம்' தியேட்டர்களுக்கும் சென்றார். திருவண்ணாமலை விசிட்டை முடித்துக் கொண்டு பாண்டிச்சேரிக்கு சென்ற சந்தானம் குழுவினர், அங்கே 'முருகா', 'ராஜா', 'ஜீவா' ஆகிய மூன்று தியேட்டர்களுக்கு சென்றிருக்கிறார்கள்.
மே 15, வியாழக்கிழமையன்று திருச்சிக்கு சென்றுவிட்டு, மே 16, வெள்ளிக்கிழமை மதுரை செல்கிறார்கள். அங்கிருந்து மே 17, சனிக்கிழமை அன்று கோவைக்கு செல்கிறார்கள்.
Comments
Post a Comment