திருமணத்துக்குப் பிறகு அமலாபால் நடிப்பாரா மாட்டாரா என்பதிலும் குழப்பம்!!!

3rd of May 2014
சென்னை::அமலா பால் - இயக்குனர் விஜய் இருவரும் தங்களது காதலைப் பற்றிய அறிவிப்பை வெளியிட்டதிலிருந்தே பிரச்சனை தொடங்கிவிட்டது. இத்தனைக்கும் அவர்களது திருமணம் எப்போது நடக்கப் போகிறது என அதிகாரபூர்வமாக அவர்கள் இதுவரை அறிவிக்கவில்லை. ஜுன் 12ம் தேதி திருமணம் என மீடியாக்கள்தான் எழுதி வருகின்றன. அதை இயக்குநர் விஜய்யோ அமலாபாலோ மறுக்கவில்லை. எனவே அமலாபாலை வைத்து படம் தயாரித்து வரும் தயாரிப்பாளர்கள் ஜுன் 12ம் தேதி அமலா பால் - இயக்குனர் விஜய் திருமணம் நடப்பதை உறுதி செய்து கொண்டனர்.
 
அதன் பின்னர், அவர்கள் கவலை அடைந்துள்ளனர். காரணம் சொன்னபடி அவர் கால்ஷீட் தருவாரா அதில் மாற்றம் இருக்குமா என்று தெரியாமல் தடுமாறிக்கொண்டிருக்கின்றனர். இது பற்றி அமலாபாலின் மானேஜரிடம் கேட்டால் தனக்கு ஒன்றும் தெரியாது என்று கையை விரிக்கிறாராம். இது ஒரு பக்கம் இருக்க, திருமணத்துக்குப் பிறகு அமலாபால் நடிப்பாரா மாட்டாரா என்பதிலும் குழப்பம் நீடிக்கிறது. திருமணத்துக்கு பிறகு நடிக்க வேண்டாம் என்கிறாராம் விஜய். நடிக்க விரும்புகிறாராம் அமலாபால். எனவே இந்தப் பிரச்சனையில் முடிவு எட்டப்படாததினால் புதுப்படங்களை ஒப்புக்கொள்ளாமலும் வேண்டாம் என்று சொல்லாமலும் நழுவி வருகிறாராம் அமலாபால்..

Comments