27th of May 2014
சென்னை::ஒளிப்பதிவாளர்கள் இயக்குனர்களாக அவதாரம் எடுக்கும்போது அவர்களது முதல் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து விடுகிறது. அந்தவகையில் ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்கிவரும் ‘யான்’ படமும் சிறப்பு கவனம் பெற்றிருக்கிறது.

ஜீவா, ‘கடல்’ துளசி நடிக்க ரொமாண்டிக் த்ரில்லராக உருவாகிவரும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இசைக்கு ஹாரிஸ் ஜெயராஜ், கலைக்கு சாபுசிரில் மற்றும் ஆஸ்கர் விருதுபெற்ற ரசூல் பூக்குட்டி என படத்தில் ஹைடெக் டெக்னீஷியன்கள் பலர் கைகோர்த்துள்ளனர்.
எல்ரெட் குமார் தயாரித்துள்ள இந்தப்படத்தின் ஒளிபரப்பு உரிமையை ஜீ தமிழ் சேனல் மிகப்பெரிய தொகை கொடுத்து கைப்பற்றியிருக்கிறது. படம் வெளியாவதற்கு முன்னரே, சேனல் ஒளிபரப்பு உரிமையை ஜீ தமிழ் வாங்கியிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருக்கிறது..
Comments
Post a Comment