கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் லிங்காவில், வடிவேலு - சந்தானம்?!!!!

5th of May 2014சென்னை::கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் முன்றாவது படம் லிங்கா. இதன் படபிடிப்பு கடந்த 2ந்தேதி முதல் மைசூரில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே ரஜினி படத்தின் படப்பிடிப்பை கர்நாடகத்தில் நடத்தக்கூடாது என்று சிலர் போர்க்கொடி பிடித்துள்ளனர். ஆனபோதும், படப்பிடிப்பு பலத்த போலீஸ் காவலுடன் நடந்து கொண்டிருக்கிறது.
 
மேலும், ரஜினி படங்களில் மிகக்குறுகிய காலத்தில், அதாவது இரண்டே மாதத்தில் படப்பிடிப்பை முடித்து விட்டு வருகிற தீபாவளி திருநாளில் படத்தை வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளதாம். இதனால் அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா போன்ற நடிகைகளும் பெங்களூரில் முகாமிட்டு தங்கள் போர்ஷனை முடித்துக்கொடுக்கும் வேலைகளில் இறங்கியுள்ளனர்.
 
இதற்கிடையே, எந்திரனைத் தொடர்ந்து சந்தானமும் லிங்காவில் நடிக்கிறாராம். மேலும், சந்திரமுகியில் காமெடியில் பின்னி எடுத்த வடிவேலுவையும் இந்த படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று ரஜினியே பிரியப்பட்டாராம். அதனால், வடிவேலுவிடமும் பேசியுள்ளார்களாம். தெனாலிராமனில் நாயகனாக நடித்துள்ள அவர் அப்படம் தோல்வியடைந்து விட்டதால், அடுத்த படம் பற்றிய கடும் குழப்பத்தில் இருந்து வந்தார். இந்த நேரத்தில், ரஜினி பட வாய்ப்பே கிடைத்து விட்டதால், மீண்டும் தனது காமெடி ராஜாங்கத்தை சூப்பர் ஸ்டாருடன் இணைந்து அரங்கேற்றம் செய்ய தயாராகிக்கொண்டிருக்கிறார்..

Comments