ஆபாச புகைப்படங்கள் வெளியீடு - போலீஸில் புகார் செய்த ஸ்ருதி ஹாசன்!!!

21st of May 2014
சென்னை::கமல் ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன், தற்போது தெலுங்கு சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். தெல்குங்கில் அவர் நடித்த 'எவடு' என்ற படத்தில் கவர்ச்சியாக நடித்திருக்கிறார். இப்படத்தின் போஸ்டர்கள் ஆபசமாக இருப்பதாக கூறி, பெண்கள் சங்கம் போராட்டமும் செய்தது.

இந்த நிலையில், தற்போது ஸ்ருதி ஹாசனின் கவர்ச்சிப் படங்கள் இணையதளங்களில் வெளியாகி வருகிறது. இது குறித்து ஐதராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்த ஸ்ருதி ஹாசன், சிலர் அதிகாரப்பூர்வமற்ற முறையில் தனது புகை கவர்ச்சி புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு வருவதாக கூறியுள்ளார்.
நடிகை ஸ்ருதி ஹாசனின் கவர்ச்சிப் படங்கள் சமீபகாலமாக இணையதளங்களில் உலா வருகின்றன. 'எவடு' என்ற தெலுங்கு சினிமா படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட இந்த படங்களில் ஆபாசமான கோணங்களில் ஸ்ருதி ஹாசன் காட்சியளிக்கிறார்.

இப்புகார் தொடர்பான மேல்விசாரணை சி.ஐ.டி. போலீசாரின் சட்டப்பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாம். ..

Comments