4th of May 2014
சென்னை::சிம்பு தனது முன்னாள் காதலிகளான
நயன்தாரா, மற்றும் ஹன்சிகாவுடன் நடித்து வருகிறார். அதாவது ஹன்சிகாவுடன்
வாலு படத்திலும் நயன்தாராவுடன் இது நம்ம ஆளு படத்திலும் நடித்து வருகிறார்.
இவர் தல அஜீத்தின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில்
சிம்பு அளித்த பேட்டின் ஒன்றில் தல படங்களை ரிலிஸான முதல் நாள் முதல் ஷோ
பார்ப்பதுபோல் ஏன் தளபதி படங்களை பார்ப்பதில்லை என்று கேள்வி
எழுப்பியுள்ளனர்.
“அதற்கு சிம்பு தளபதி ரசிகர்களை கடுப்பேற்றுவது போல் பதில்
அளித்துள்ளார். தல படத்தை பார்ப்பது போன்ற ஒரு உற்சாகம் வேறு யாருடைய
படங்கள் பார்த்தாலும் கிடைக்காது.
எனக்கு தல அஜீத்தை எந்த அளவுக்கு பிடிக்குமோ அதே அளவுக்கு தளபதி
விஜய்யையும் பிடிக்கும். ஆனாலும் நான் விஜய் படங்களை பார்ப்பதில்லை.
ஏன்னேன்றால், தளபதி படங்களை பார்த்தால், அவர் பாதிப்பு எனது படங்களிலும்
வந்துவிடும் என்பதால் நான் விஜய் படங்களை பார்ப்பதில்லை.
விஜய் படங்களை நான் பார்ப்பதில்லை என்பதற்காக எனக்கு விஜய்யை பிடிக்காது என்பது அர்த்தமல்ல. மற்றவர்களை போல
எனக்கு ஒளிவுமறைவாக பேசத்தெரியாது. அதனால் நான் தைரியமாக விஜய் படங்களை பார்ப்பதில்லை என்று கூறுகிறேன்.
நான் தல ரசிகன் என்று கூறிக்கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறியுள்ளார்..
எனக்கு ஒளிவுமறைவாக பேசத்தெரியாது. அதனால் நான் தைரியமாக விஜய் படங்களை பார்ப்பதில்லை என்று கூறுகிறேன்.
நான் தல ரசிகன் என்று கூறிக்கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறியுள்ளார்..
Comments
Post a Comment