அம்புலி கூட்டணியின் அடுத்த தயாரிப்பு ‘ஆ!!!


13th of May 2014
சென்னை::இன்னொரு படத்திலும் இணையவேண்டும் என்பது ஏற்கனவே அம்புலி’ படம் எடுத்தபோதே அதன் தயாரிப்பாளரும் இயக்குனர்களும் முடிவு பண்ணிய விஷயம் தான். 3டியில் உருவாகிய ‘அம்புலி’ படத்திற்கு ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அதே கூட்டணி மீண்டும் உருவாக்கியிருக்கும் படம் தான் ‘ஆ’.
 
ஜப்பான், துபாய், ஆந்திராவில் உள்ள ஒரு ஆள் அரவமற்ற நெடுஞ்சாலை, வங்க கடல் நடுவே, மற்றும் தமிழகத்தின் தென்கோடியில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள ஏ.டி.எம் என ஐந்து வித்தியாசமான தளத்தில் நடக்கும் திகில் கதை தான் இந்த ‘ ஆ’.
 
உலக தரத்துக்கு இணையாக அம்புலி 3டி படம் மூலம் தமிழ் திரை பட உலகின் கவனத்தை ஈர்த்த இயக்குனர்கள் ஹரி-ஹரீஷ் இரட்டையர்கள் மீண்டும் இணைந்து இயக்கும் படம் இது. படத்திற்கு ஏன் ‘ஆ’ என்ற பெயரை வைத்தீர்கள் என்றால் வித்தியாசமான பதில் சொல்கிறார்கள்.
 
ஆ ‘ என்ற சத்தம் அலறலாக வெளிப்படும்போது பயத்தையும், பயங்கரத்தையும், வலியையும் உணர்த்தும். இந்த வார்த்தையை விட பலமாக பயம் என்ற உணர்வை வெளிப்படுத்தும் வார்த்தை கிடையாது என்று கூறுகின்றனர் இயக்குனர்கள் ஹரி மற்றும் ஹரீஷ்..

Comments