30th of May 2014
சென்னை::1990ல் தமிழ் சினிமாவில் ‘புரியாத புதிர்’ படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்த கே.எஸ்.ரவிகுமாருக்கு இது வெள்ளிவிழா ஆண்டு.. இந்த 25 வருடங்களில் இவர் அடைந்துள்ள உயரம் அளவிடமுடியாதது. தமிழ்சினிமாவின் இரு ஜாம்பவான்களான ரஜினியும் கமலும் தங்களது அன்பு பிடியால் இவரை கெட்டியாக பிடித்துக்கொண்டு, முறைவைத்துக்கொண்டு ஆளுக்கொரு படத்தில் இவரது டைரக்ஷனில் நடித்த்தே இதற்கு அழுத்தமான சாட்சி.
விக்ரம், தனுஷ் தவிர மற்ற அனைத்து முதல்வரிசை நடிகர்களும் இவரது டைரக்ஷனில் நடித்துவிட்டார்கள். நல்ல கதை யாரிடமிருந்தாலும் அதை வாங்கி அதற்கு தனது தெளிவான திரைக்கதையாலும் டைரக்ஷனாலும் உயிரூட்டக்கூடிய வல்லமை இவருக்கு உண்டு.. சரத்குமாரை முன்னணி நடிகர்களின் பட்டியலில் இணைத்த பெருமையும் இவரையே சாரும்.
இதுவரை வெளிநபர்களின் கதைகளையே படமாக்கிவந்த கே.எஸ்.ரவிகுமார் சூப்பர்ஸ்டாரின் ‘கோச்சடையான்’ படத்திற்கு தானே கதை எழுதி அதை சூப்பர்ஹிட்டாகவும் மாற்றிக்காட்டியுள்ளார். இப்போது ரஜினியுடன் ‘லிங்கா’ படப்பிடிப்பை நடத்திக்கொண்டு இருக்கிறார்.
இன்று பிறந்தநாள் காணும் கே.எஸ்.ரவிகுமாருக்கு நமது Poonththalir-Kollywood தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது..
Comments
Post a Comment