10th of May 2014
சென்னை::ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்திற்கு பிறகு மிஷ்கின் இயக்கும் படத்துக்கு பிசாசு என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதனை இயக்குனர் பாலாவின் பி ஸ்டூடியோ தயாரிக்கிறது. வருகிற 14ந் தேதி பிசாசுவின் முதல்கட்ட படப்பிடிப்புகள் துவங்குகிறது. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் போன்று இதுவும் முற்றிலும் புதுமையான முறையில் உருவாக்கப்படும் படம். இப்போது திகில் படங்களின் சீசன் என்பதால் மிஷ்கின் தன் பாணியில் சொல்லும் திகில் கதை என்கிறார்கள். படத்திற்கான நடிகர், நடிகை தேர்வில் மும்முரமாக இருக்கிறார் மிஷ்கின்.

இயக்குனர்கள் பாலா, மிஸ்கின் ரெண்டுபேருமே தங்களது படைப்புகள் ரதியாக வேறு வேறு துருவங்கள் தான்.. இருந்தாலும் இவர்கள் இருவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை துணிச்சல்.. யாருக்காகவும் தங்களது படைப்புகளில் துளிகூட சமரசம் செய்துகொள்ளாத துணிச்சல்.
பரதேசி’ ஒருவகையான துணிச்சல் என்றால், ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ வேறுவகையான துணிச்சல். அதுதான் இப்போது இவர்கள் இருவரையும் ஒரே படத்தில் இணைய வைத்திருக்கிறது. படத்தின் பெயர் என்ன தெரியுமா..? பிசாசு’.. மிஸ்கினின் பட டைட்டில்கள் எப்போதுமே வித்தியாசமாகத்தானே இருக்கும்.
ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்திற்கு விமர்சன ரீதியாக கிடைத்த வரவேற்பால் சற்று ரிலாக்ஸான மிஸ்கின், தனது அடுத்த படத்திற்கான கதையை பாலாவிடம் சொல்ல அதில் இம்ப்ரெஸ் ஆன பாலா அந்தப்படத்தை நானே தயாரிக்கிறேன் என்று சில மாதங்களுக்கு முன் சொல்லியிருந்தார்.
இதோ இப்போது சொன்னபடி இருவரும் சேர்ந்து ஆரம்பித்தும் விட்டார்கள். வரும் 14ஆம் தேதி இந்தப்படத்திற்கான பூஜை நடைபெற இருக்கிறது. அதைத்தொடர்ந்து படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று தெரிகிறது.
Comments
Post a Comment