அறிவியலை வைத்து மிரட்டும் ‘அப்புச்சி கிராமம்: தமிழ்நாட்டில் நடிகைகள் பஞ்சம், அப்புச்சி கிராமத்தில் மூன்று மாநில அழகிகள்!!!
5th of May 2014
சென்னை::விண்கல் ஒன்றால் தாக்கப்படும் ஒரே கிராமத்திலே அனைவரும் இன்னும் எட்டு நாளில் சாகப்போகிறார்கள் என்று தெரிந்தால் என்ன செய்வார்கள். அதைத்தான் அறிவியல்பூர்வமாக உணர்ச்சிகளை கலந்து ‘அப்புச்சி கிராமம்’ ஆக சொல்லியிருக்கிறார்கள்.
சென்னை::விண்கல் ஒன்றால் தாக்கப்படும் ஒரே கிராமத்திலே அனைவரும் இன்னும் எட்டு நாளில் சாகப்போகிறார்கள் என்று தெரிந்தால் என்ன செய்வார்கள். அதைத்தான் அறிவியல்பூர்வமாக உணர்ச்சிகளை கலந்து ‘அப்புச்சி கிராமம்’ ஆக சொல்லியிருக்கிறார்கள்.
படத்தின் கதையை ஜினேஷ் என்பவர் எழுத, இந்தப்படத்தை இயக்கியிருப்பது ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக இருந்த வி.ஐ.ஆனந்த். புதுமுகம் பிரவீன்குமார் ஹீரோ.. அனுஷா, சுவாசிகா, சுஜா என மூன்று ஹீரோயின்கள். படத்திற்கு பக்கபலமாக கஞ்சா கருப்பு, ‘கும்கி’ ஜோ மல்லூரி உட்பட பலர் நடித்துள்ளனர்..
ஐ கேட்ச் மல்டிமீடியா தயாரித்துள்ள இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று காலை நடைபெற்றது. படக்குழுவினரில் நடிகர் ஜோ மல்லூரி தவிர ஆண்கள் அனைவரும் வேட்டி, சட்டையும், பெண்கள் பட்டுப்புடவையும் அணிந்துவந்து ஆச்சர்யப்படுத்தினர்.
தமிழ்நாட்டில் நடிகைகள் பஞ்சம் தலைவிரித்தாடுவதால் அப்புச்சி கிராமத்தில் மூன்று மாநில அழகிகள்!
தமிழ்நாட்டில் நடிகைகள் பஞ்சம் தலைவிரித்தாடுவதால்தான் கேரளா,
ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலத்து நடிகைகள் எதிர்பார்த்திருக்க வேண்டிய
கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது தமிழ் சினிமா. அந்த வகையில்,
அப்புச்சி கிராமம் என்ற படத்தில் கேரள அழகி சுவாசிகா, ஆந்திர அழகி சுஜா,
கர்நாடக அழகி அனுஷா ஆகியோர் நடித்துள்ளனர்.
இவர்களில்
சுவாசிகா, வைகை, கோரிப்பாளையம், சாட்டை உள்பட பல படங்களில் நடித்தவர்.
இப்படம் 8 விதமான காலகட்ட சூழலில் உருவாகியிருப்பதால். இதில் சுவாசிகாவும்
ஒரு சூழலில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறராம். அதேப்போல் சுஜா, ஒரு
அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கிறார். கிராமத்து சூழலில் உருவாகும் ஒரு
நாட்டுப்புற பாடலில் பக்கா கிராமத்து பெண்ணாட்டம் உருக்கமாக
நடித்திருக்கிறாராம். அதனால் இந்த படத்துக்குப்பிறகு தனக்கு தமிழில் ஒரு
நல்ல அடையாளம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்.
இவர்களைத்
தொடர்ந்து நடித்துள்ள அனுஷாதான் இந்த படத்தின் பிரதான நாயகி.
கர்நாடகத்தில் இருந்து வந்துள்ள இவர், எந்த மாதிரியான கிளாமர் காண்பித்து
நடிப்பதற்கும் டபுள் ஓகேதானாம். ஆனால், இது கிராமத்து கதை என்பதால்,
அவரையும் அப்புச்சி கிராமவாசியாகவே பக்காவாக மாற்றி நடிக்கவைத்துள்ளனர்.
ஆக, இந்த மூன்று அண்டை மாநில அழகிகளும் தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும்
நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்களாம்..
Comments
Post a Comment