கோச்சடையான் அனிமேஷன் படத்தையடுத்து ரஜினியின் மைசூர் செண்டிமென்ட்!!!

4th of May 2014
சென்னை::கோச்சடையான் அனிமேஷன் படத்தையடுத்து ரஜினி டபுள் ரோலில் நடிக்கும் படம் லிங்கா. இந்த படத்தில் இதற்கு முன்பு முத்து, படையப்பா படங்களில் பார்த்த விறுவிறுப்பான ரஜினியை பார்க்கலாமாம். அந்த படங்களைப் போலவே காதல், செண்டிமென்ட், காமெடி ஆக்சன், ஆவேசம் என பல்சுவை கலந்து கதையை உருவாக்கியிருக்கிறாராம் கே.எஸ்.ரவிக்குமார்.

அதோடு, படத்தின் நடிக்கும் சோனாக்க்ஷி சின்ஹா, அனுஷ்கா ஆகிய இருவருக்கும் நிகராக நடனமும் ஆடுகிறாராம் ரஜினி. அந்த வகையில், சோனாக்ஷி சிட்டி கேர்ளாக வருகிறாராம். அதனால் அவருடனான பாடல் காட்சிகளில் நடிக்க அழகியல் நிறைந்த சில அயல் நாடுகளில் படப்பிடிப்பு நடத்தப்படுகிறதாம். அனுஷ்கா, கிராமத்து பெண்ணாக நடிப்பதால் அவருடன் ரஜினி இடம் பெறும் காட்சிகள் பெரும்பாலும் மைசூர் பகுதியிலேயே படமாக்கப்பட உள்ளதாம்.

மேலும், இந்த படத்தை பெங்களூருவில் பூஜை போட்டு படப்பிடிப்பு நடத்துவதற்கும் ஒரு செண்டிமென்ட் உள்ளதாம். அதாவது, இதற்கு முன்பு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த முத்து, படையப்பா என்ற இரண்டு படங்களுமே மைசூரில்தான் படப்பிடிப்பு நடத்தப்பட்டதாம். அந்த வகையில் அந்த இரண்டு படங்களுமே மெகா ஹிட் என்பதால், இந்த லிங்கா படப்பிடிப்பையும் மைசூரிலேயே நடத்தலாம் என்று கூறினாராம் ரஜினி.
கூடவே இப்படத்தின் தயாரிப்பாளரான ராக்லைன் வெஙகடேக்ஷும் பெங்களூர்காரர் என்பதால் அங்குள்ள சில முக்கியத்துவம் வாய்ந்த அரண்மனைகளில் படப்பிடிப்பு நடத்தவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறதாம்.

மே 9-ந்தேதி ரஜினி நடிப்பில் வெளியாக உள்ள கோச்சடையான் வெற்றி பெற ரஜினி ரசிகர்கள் பிரார்த்தனை!


ரஜினி உடல்நலமில்லாமல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது தமிழகமெங்கிலும் உள்ள அவரது ரசிகர்கள் பிரசித்தி பெற்ற கோவில்களில் அவர் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டுமென்று பலதரப்பட்ட விசேஷ பூஜைகள்,கூட்டு பிரார்த்தனைகளை செய்தனர். அவர்களது பிரார்த்தனையின் பலனாக ரஜினி நலம் பெற்று வீடு திரும்பினார்.

இந்நிலையில், மே 9-ந்தேதி ரஜினி நடிப்பில் வெளியாக உள்ள கோச்சடையான் படம் வெற்றி பெறவும், தற்போது அவரது ரசிகர்கள் சிறப்பு வழிபாடுகள் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், திருப்பதி கோயிலுக்கு வேலூர் ரசிகர்கள் நடைபயணமாக சென்று பிரார்த்தனை செய்ததையடுத்து, திருப்பூரில் உள்ள ரசிகர்கள் முளைப்பாரி ஊர்வலம் நடத்தியுள்ளனர். அதையடுத்து ராமேஸ்வரம் கோயிலில் 1008 சங்கு பூஜை நடத்தி சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளனர்.

மேலும், ராமேஸ்வரம் தர்கா, சர்ச்களில் 10 ஆயிரம் பேருக்கு இலவச உணவு வழங்க திட்டமிட்டுள்ள ரஜினி ரசிகர்கள், ராமேஸ்வரம் தீர்த்தத்தை எடுத்து சென்று ரஜினியின் வீட்டில் கொடுக்கவும் திட்டமிட்டுள்ளார்களாம். ஆக, கோச்சடையான் திரைக்கு வருவது வரை இதுபோன்ற பூஜை, சிறப்பு வழிபாடுகள் ஆங்காங்கே தொடரும் என்கிறார்கள்...
 

Comments