அமரகாவியம்’ பார்த்து எனக்கு கிடைத்த பிரமிப்பும், பெருமிதமும் சொல்லில் அடங்காதவை: ஆர்யா!!!!

19th of May 2014
சென்னை::நடிகர் ஆர்யா தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ள படம் ‘அமரகாவியம்’. இப்படத்தில் அவருடைய தம்பி சத்யா கதாநாயகனாகவும், மியா ஜார்ஜ் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். ‘நான்’ படத்தை இயக்கிய ஜீவா சங்கர் இயக்கியுள்ளார். இப்படம் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்நிலையில், இப்படத்தை ஆர்யா மற்றும் அவரது நண்பர்களுக்காக பிரத்யேகமாக திரையிட்டுள்ளனர். படம் பார்த்து முடிந்தவுடன் கண்களில் கண்ணீர் துளிகளுடன் யாருடனும் பேசமால் திரையரங்கை விட்டு வெளியேறிய ஆர்யா, நேராக அவர் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுள்ளார். தனது உதவியாளரை அழைத்து 143 கேக் வாங்கி வரச்சொல்லி தனது படக்குழுவினருக்கு கொடுத்து மகிழ்ந்துள்ளார்.

இதுகுறித்து ஆர்யா கூறும்போது:-

ஐ லவ் யூ என்ற மூன்று முக்கிய வார்த்தைகளின் இன்னொரு வடிவம்தான் 143. படம் பார்த்த வினாடியே பரவசத்தில் எனக்கு தோன்றிய முதல் செய்கைதான் இது. இப்படம் ஒரு இனிமையான காதல் கதையை நம் கண்முன் நிறுத்தப் போவது நிஜம்.

தயாரிப்பாளர் என்ற முறையில் ‘அமரகாவியம்’ பார்த்து எனக்கு கிடைத்த பிரமிப்பும், பெருமிதமும் சொல்லில் அடங்காதவை. இந்த உணர்வு என்னை மேலும் தரமான படங்களை தரவேண்டும் என சொல்ல வைக்கிறது என்று கூறினார்....

Comments